Pages

கூகுள் அனலைடிக்ஸ்( Google Analytics ): ஒரு விரிவான விளக்கம்.

வலைப்பதிவு(Blog), இணையதளம் அல்லது தொழில் சார்ந்த இணையதளம்
analytic-google
என அனைத்து இணையதளத்திற்கும் முதன்மையானது, அந்த இணையத்தின் செயல்பாடுகளை கண்காணித்தல் ஆகும். இணையத்தில் பல இணையதளங்கள் இந்த சேவையை வழங்குகின்றன, இவை இணையதளத்தின் செயல்பாடுகளை காண்கணிக்கின்றன. இவ்வகை இணையதளங்களின் குறிப்பிடத்தக்கது கூகுள் அனலைடிக்ஸ் இணையதளமாகும், மேலும் இதை எனது வலைப்பதிவில் பயன்படுத்திவருதோடு, மற்ற வலைப்பதிவாளர்களுக்கும் நான் பரிந்துரைப்பது. பெரும்பாலான வலைப்பதிவாளர்கள் கூகுள் அனலைடிக் சேவையை தங்கள் இணையதளத்தில் அவற்றின் செயல்பாடுகளை கண்காணிக்க பயன்படுத்துகின்றனர்.

வலைப்பதிவாளர்கள் அல்லது இணையதள பயன்பட்டாளர்களுக்கு அறிய வரும் ஒரு இணையதளத்தை ஆரம்பித்து அதை கூகுள் தேடல் பக்கத்தில் அதிக ரேங்க் வாங்க வைப்பது  எவ்வளவு கடினம் என்பது. மேலும் நீங்கள் புதியதாக இணையதளம் ஆரம்பிக்க இருக்கிறீர்கள், நீங்கள் இதைப்பற்றி அறிவது மிகவும் அவசியமாகும். இன்றளவில் கோடிக்கணக்கான இணையதளங்கள் இணையத்தில் இயங்கி வருகின்றன, இவைகளிடம் போட்டியிட்டு, அதிக ரேங்க் வாங்குவது என்பது கடினமானதாகும். உங்களுடைய இணையதளத்தின் பயனர்களின் Traffic Source, Reader Demographic, Browser Used to search, Bounce Rate போன்ற பல நுண்ணிய தகவல்களை அறிவது அவசியமாகும். இந்த தகவல்களை அறிவது மூலம் உங்கள் பயனர்களின் தேவை என்ன, இன்னும் எவ்வாறு உங்களின் இணையதளத்தை பலப்படுத்துவது அல்லது மாற்றி அமைப்பது போன்ற நடவடிக்கைகளை செய்வதன் மூலம் எளிமையாக் அதிக ரேங்க் வாங்கி விடலாம். இவை அனைத்தையும் செய்ய உங்களுக்கு தேவை கூகுள் அனலைடிக் ஆகும்.

கூகுள் அனலைடிக்


கூகுள் அனலைடிக்ஸ் என்பது உங்களின் இணையதளத்தில் செயல்பாடுகள் அல்லது புள்ளிவிவரங்களை கவனிக்கும் கூகுள் நிறுவனத்தின் சேவையாகும். பயனர்கள் எப்படி உங்கள் இணையதளத்திற்கு வந்தார்கள், எத்தனை பக்கங்களை அவர்கள் பார்வையிட்டார்கள் போன்ற பல தகவல்களை தருகின்றன. இது உங்களின் பயனர்கள் தேவையை புரிந்து அவர்களுக்கேற்றார்போல் இணையதளத்தை மாற்றம் செய்ய உதவுகிறது.

Google Analytics

கூகுள் அனலைடிக் பயன் படுத்துவது என்பது  எளிதான ஒன்று, இலவசமாக கூகுள் அனலைடிக் புதிய கணக்கை துவங்குங்கள் பின் உங்களின் இணையதளத்தில் Tracking Code ஐ பொருத்துங்கள். இதை செய்து முடித்தவுடன் உங்களின் இணையதளம் கூகுள் அனலைடிக் மூலம் கண்காணிக்கப்படும்.

கூகுள் அனலைடிக்- முக்கிய அம்சங்கள்


புள்ளிவிவரங்கள் என்பது இணையதளம் எப்படி இயங்குகிறது மற்றும் வாடிக்கையாளர்கள் எவ்வாறு உங்களின் இணையதளத்திற்கு வருகின்றனர் என்பதை கண்காணித்து கொடுக்கபடுவதாகும். கூகுள் அனலைடிக்ஸ் புள்ளி விவரங்கள் மட்டுமல்லாது வேறு என்னென்ன முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது என பார்ப்போம்.

Analysis Tool


கூகுள் அனலைடிக் Analysis Tool மிக சிறந்த ஒன்றாகும். உங்களின் இணையதளத்திற்கு தேவையான அனைத்து தகவல்கள் அல்லது புள்ளி விவரங்களை கண்காணித்து வழங்குகின்றது. இது மட்டுமல்லது பல தகவல்களை உங்களுக்கு வழங்குகின்றது.

Content Analysis Tool


இது உங்களின் இணையதளத்தில் இருக்கும் மிக சிறந்த கட்டுரை (Content) அறிந்துகொள்ள உதவுகிறது. மேலும் எத்தனை பயனர்கள் உங்களின் இணையதளத்தின் பக்கங்களை பார்வையிட்டார்கள் , அவர்கள் எவ்வளவு நேரம் அந்த பக்கத்தில் இருந்தார்கள் என அறிந்து கொள்ளலாம். மேலும் உங்களின் இணையதளத்தில் வாடிக்கையாளர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என எளிதாக கண்காணிக்க முடியும்.

Mobile Analytics


இது எத்தனை வாடிக்கையாளர்கள் தொலைபேசியை பயன்படுத்தி உங்களின் இணையதளத்தை பார்வையிட்டு இருக்கிறார்கள், அவர்களின் எதிர்பார்ப்புகள் என்ன என்பதை அறிய முடியும். இன்றயை கால கட்டத்தில் தொலைபேசி பயனர்கள் அதிக அளவு இணையத்தை பயன்படுத்துகின்றனர். இது மேலும் அதிக தொலைபேசி வாடிக்கையாளர்களை கவர உதவும்.

Adsense Integration


கூகுள் அனலைடிக் மூலம் அதிகம் மற்றும் குறைவாக வாடிக்கையாளர்கள் பார்வையிடும் பக்கங்களை கண்டறிந்து, அதில் நீங்கள் அட்சென்ஸ் விளம்பரங்களை காட்சிப்படுத்தலாம். இது வாடிக்கையாளர்கள் பார்வையிடும் விளம்பரங்களை போன்றவற்றையும் கண்காணிக்க உதவும்.

மேல குறிப்பிட்டுள்ள அம்சங்கள் அனைத்தும் கூகுள் அனலைடிக்கின் ஒரு சில அம்சங்களே, இது போன்ற பல அம்சங்கள் இருக்கின்றன. நீங்கள் புதியதாக இணையதளம் ஆரம்பிக்க இருப்பவர் எனில் நீங்கள் கணடிப்பாக கூகுள் அனலைடிக் பயன்படுத்த பரிந்துரைக்கிறேன்.
இந்த கட்டுரை பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.