நீங்கள்
ஆன்லைனில் வேலை செய்ய ஆரம்பிக்கும் போது அல்லது இணையத்தில் பணம் சம்பாதிக்க
துவங்கும் போது, பணத்தை செலுத்தவோ அல்லது பெறவோ
வேண்டியிருக்கும். சாதரணமாக நீங்கள் CREDIT CARD OR DEBIT CARD மூலம் பணத்தை இணையத்தில்
செலுத்தலாம். ஆனால் பணத்தை பெற பேபால், கூகுள் வாலட் போன்றவற்றை
பயன்படுத்த வேண்டியிருக்கும். இந்த ஆன்லைன் பண பரிவர்த்தனைகளை செய்ய உங்களுக்கு
பேபால்() கணக்கு அவசியமாகும். இந்தியாவை பொருத்தவரை வெளி நாடுகளில் இருந்து பணத்தை
பெறுவது பேபால் மூலம் எளிமையாகிறது. மேலும் பேபால் உலக அளவில் அனைவரின் நம்பிக்கைக்கு
உரியதாக திகழ்கிறது. நீங்கள் ஒரு வலைப்பதிவாளராக இருப்பின் பேபால் கணக்கு மிகவும்
அவசியமாகும், ஏனெனில் பெரும்பாலான விளம்பர நிறுவனங்கள்
பணத்தை பேபால் கணக்கு மூலமே செலுத்துகின்றனர்.
பேபால்
கணக்கின் சில முக்கிய நன்மைகள்:
- ஆன்லைனில்
அல்லது இணையத்தில் உங்களின் CREDIT CARD-ன் தகவல்களை பகிராமலே பேபால் மூலம்
பணத்தை செலுத்தலாம் அல்லது பெறலாம்.
- வெளி
நாடுகளில் இருந்து பணத்தை எளிமையாக பெறலாம், பின் அதை உங்கள் வங்கி கணக்கிற்கு
மாற்றிக்கொள்ளலாம்.
- அதிக அளவு
பணத்தை நீங்கள் செலுத்தலாம்.
பேபால் கணக்கை
துவங்கும் வழிமுறைகள்:
முதலில்
Paypal.Com
சென்று
Get
Started என்று குறிப்பிட்டு இருப்பதை க்ளிக் செய்யவும். அடுத்த
பக்கத்தில் Personal OR Business Account என இரண்டு வசதிகள்
கொடுக்கப்பட்டு இருக்கும். நீங்கள் வலைப்பதிவாளராக இருப்பின் Personal
Account - ஐ தேர்ந்தெடுப்பது நன்று, Business Account க்கு மாற விரும்பினால்
பின்னர் மாற்றிக்கொள்ளலாம்.
அடுத்த
பக்கத்தில் உங்களின் கணக்கை துவங்க ஒரு FORM - ஐ நிரப்ப வேண்டும். இதில்
உங்களின் CREDIT CARD OR DEBIT CARD - தகவல்களை நிரப்ப வேண்டும்
அல்லது அதனை SKIP செய்து பின்னர் நிரப்பிக்கொள்ளலாம். பேபால்
கணக்கை துவங்க பின்வரும் செயல்களை செய்ய வேண்டும்.
- PAN CARD -ன் தகவல்களை
சேர்க்க வேண்டும்.
- CONFIRM
YOUR EMAIL- மின்னஞ்சல் முகவரியை சரிபார்க்கும் செயல்முறையை செய்ய வேண்டும்.
- ADD BANK
ACCOUNT - வங்கி கணக்கை சேர்க்க வேண்டும்.
- PURPOSE
CODE - எதற்கு பேபால் மூலம் பண பரிவர்த்தனை செய்கிறீர்கள் என குறிப்பிட
வேண்டும்.
PAN CARD
PAN
CARD -ல்
இருக்கும் பெயரும் உங்களின் பேபால் கணக்கிற்கு தரும் பெயரும் ஒரே பெயராக இருக்க
வேண்டும்.
வங்கி
கணக்கு பற்றிய தகவல்களை சேர்த்தல்
இந்த
செயல்முறையை செய்து முடிக்க இரண்டு முதல் மூன்று நாட்கள் ஆகும். இதை செய்வதன்
மூலம் பேபால் கணக்கிலிருந்து வங்கி கணக்கிற்கு பணத்தை மாற்றிக்கொள்ளலாம். இதை
செய்ய பின்வரும் தகவல்களை கொடுக்க வேண்டும்.
- உங்கள் பெயர்
- உங்கள் வங்கி
கணக்கு
- உங்கள் வங்கி
கிளையின் IFSC CODE ( இதை உங்களின் வங்கியின் அதிகாரபூர்வ இணையதளத்தில்
கண்டுபிடிக்கலாம். அல்லது கூகுள் செய்து பார்க்கலாம்.)
இந்த தகவல்களை
நிரப்பிய பிறகு, வங்கி கணக்கை
சரிபார்க்க பேபால் இரண்டு குறைந்தபட்ச தொகையினை உங்களின் வங்கி கணக்கில்
செலுத்தும். இந்த தகவலை பேபால் கணக்கில் நிரப்புவதன் மூலம் உங்களின் வங்கி கணக்கு
சரிபார்க்கப்படும்.
PURPOSE
CODE - ஐ சேர்த்தல்
அடுத்தாக
PURPOSE
CODE - ஐ சேர்க்க வேண்டும். இதில் நீங்கள் எந்த காரணத்திற்காக
பணபரிவர்த்தனை செய்கிறீர்கள் என தெரிவிக்க வேண்டும்.
மேலே
குறிப்பிட்ட தகவல்களை செய்து முடித்தவுடன் உங்கள் பேபால் கணக்கை உபயோகிக்கலாம்.
மேலும்
பல புதிய தகவல்களுக்கு உங்களின் மின்னஞ்சல் முகவரியை மேலே பகிரவும்.