இணையத்தில்
பணம் சம்பாதிக்க நினைப்பவர்கள் பெரும்பாலும் முதலில் தேர்ந்தெடுப்பது வலைப்பதிவு
ஆகும். வலைப்பதிவு செய்ய அடிப்படையான ஒன்று ஒரு இணையதளத்தை நிறுவுதல். இந்த
பயிற்சி கட்டுரையின் மூலம் புதிய இணையதளத்தை Wordpress platform புதிய இணையதளத்தை நிறுவது என
படிப்படியாக பார்ப்போம். இந்த வழிமுறையை பயன்படுத்தி இணையத்தில் பணம் சம்பாதிக்க
பயன்படும் வலைப்பதிவிற்கு ஏற்ற இணையதளத்தை மற்றும் தனி நபர் அல்லது
நிறுவனத்திற்கான இணையதளத்தை உருவாக்கலாம்.
புதிய
இணையத்தளத்தை உருவாக்க பயன்படும் அடிப்படைகளை காண்போம்.
Domain Name வாங்குதல்
புதிய
இணையதளத்தை உருவாக்க முதலில் செய்ய வேண்டியது Domain Name எனப்படும உங்களின்
இணையதளத்தின் முகவரியை வாங்குதல் ஆகும். இது உங்களின் இணையதளத்தை அனைவரும்
இணையத்தில் கண்டுபிடிக்க பயன்படுவது ஆகும். உதாரணமாக www.mywebsite.com.
Domain Name தேர்ந்தெடுப்பது குறித்த உங்களின் சந்தேகங்கள் மற்றும்
தேர்ந்தெடுக்கும் வழிமுறைகளை அறிய Domain Name தேர்ந்தெடுப்பது எப்படிஎன்பதை விளக்கும் முந்தையை கட்டுரையை படியுங்கள்.
ஆயிரக்கணக்கான
Domain
Name Registrar நிறுவனங்கள் இணையத்தில் செயல்பட்டு வருகின்றன. பெரும்பாலான
வலைப்பதிவாளர்கள் அல்லது இணையத்தை உருவாக்குபவர்கள் பயன்படுத்துவது godaddy.com.
இந்த
நிறுவனத்தில் .com Domain Extension கள் மாதம் ரூபாய் 189*
கிடைக்கின்றன.
மேலும் இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் சேவைகள் அனைவரின்
நம்பிக்கைகுரியவையாக இருக்கின்றன.
Web Hosting வாங்குதல்
புதிய
இணையதளத்தை உருவாக்க இரண்டாவது முக்கியமான ஒன்று Web Hosting வாங்குதல் ஆகும். Web
Hosting என்பது உங்களின் இணையத்தில் பகிரும் கோப்புகளை சேமித்து
வைக்கும் ஒரு கணினி ஆகும். வெப் ஹொஸ்டிங் தேர்ந்தெடுக்கும் போது மிகவும் கவன்மாக்
இருக்கவும் Web Hosting வாங்குதல் குறித்த வழிகாட்டுதலுக்கு Web
Hosting தேர்ந்தெடுப்பது எப்படி என்ற கட்டுரையை படிக்கவும்.
பெரும்பாலான வலைப்பதிவாளர்கள் BlueHost, HostGator மற்றும் Fatcow
போன்ற
நிறுவனங்களை பயன்படுத்துகின்றனர். நான் உங்களுக்கு பரிந்துரைப்பது HostGator
ஆகும்.
இதை பரிந்துரைப்பதற்கான காரணங்கள் சில,
- குறைந்த
கட்டணம்- இந்த நிறுவனம் மாதம் $4 இருந்து தங்கள் சேவையை
வழங்குகின்றனர்.
- 24/7 வாடிக்கையாளர்
ஆதரவு(Customer Support): இதன் மூலம் எப்போது உங்கள்
இணையதளத்தில் சிக்கல் வருகிறதோ அப்போதெல்லாம் அனுபவமிக்க உதவிகளை
கேட்டறியலாம்.
- பயிற்சி
கட்டுரைகள்: இவர்கள் பல பயிற்சி கட்டுரைகளை வழங்குகின்றனர் இது
புதியவர்களுக்கு எளிமையாக இருக்க வழிசெய்கிறது.
Name Sever சேர்த்தல்
இந்த
செயல்முறையை செய்து முடிக்க சுமார் 5 நிமிடங்கள் மட்டுமே ஆகும். Name
Server என்பது உங்களின் Domain Name Registrar க்கு உங்களின்
இணையத்தளத்தில் பகிர போகும் கோப்புகளை எங்கே சேமித்து வைக்க வேண்டும் என
கூறுகிறது. Name Server குறித்த தகவல்கள்,
Web Hosting வாங்கிய பிறகு அந்த நிறுவனம் அனுப்பும் மின்னஞ்சலில்
இருக்கும். எடுத்துகாட்டாக

மின்னஞ்சல்
Open
செய்தவுடன்
நீங்கள் பார்க்கும் தகவல்கள் Domain, User name, Password, Server IP மட்டும் Control
Panel Address.
இதில்
1st
Nameserver மற்றும் 2nd Nameserver என் இரண்டு காணப்படும். இந்த
இரண்டையும் Domain Name registrar கணக்கில் சேர்க்க வேண்டும்.
கீழே குறிப்பிட்டு இருப்பதைப்போல, Domain Name registrar கணக்கிற்கு சென்று சேர்க்க
வேண்டும்.

இந்த
செயல்முறையை செய்ததன் மூலம் உங்களின் புதிய இணையதளத்தின் கோப்புகள் அனைத்தும் Hosting
கணக்கிற்கு
அனுப்பிவைக்கப்படும். இந்த செயல்முறை நடைபெற பத்து நிமிடங்கள் வரை ஆகும். இதன்
மூலம் உங்கள் இணையதளம் இணையத்தில் காட்சிப்படுத்தப்படும் ஆனால் மற்ற இணையதளங்களை
போல் அல்லாமல் ஒரு பக்கம் மட்டும் கொண்டதாகவோ அல்லது வெரும் கோப்புள் மட்டும்
கொண்டதாக இருக்கும்.
Control Panel பயன்படுத்தி Blog ஐ உருவாக்குங்கள்
அடுத்தாக
செய்ய வேண்டியது Control Panel ஐ பயன்படுத்தி Blog
ஐ
உருவாக்க வேண்டும். உங்களுக்கு Web Hosting நிறுவனம் அனுப்பியுள்ள
மின்னஞ்சலை திரும்பவும் கவனியுங்கள்.
Your
Control Panel என்ற இடத்தில் இருக்கும் Link ஐ க்ளிக் செய்யுங்கள். உங்களின்
user
name மற்றும்
password
ஐ type
செய்து
உங்களின் Control Panel ஐ கவனியுங்கள் இதில் Fantastica
De Luxe என்ற icon ஐ தேர்ந்தெடுங்கள்

அல்லது
சில Control
Panel கள் Fantastica
De Luxe பயன்படுத்துவதில்லை அந்த நேரத்தில் Wordpress
ஐ
தேர்ந்தெடுங்கள். உதாரணமாக,

மேலே
குறிப்பிடப்பட்ட இரண்டு முறைகளிலும் நீங்கள் Wordpress blog ஐ உருவாக்கலாம். கீழே உள்ள
படத்தில் குறிப்பிட்டுள்ளவாறு Wordpress என்ற Option
தேர்ந்தெடுங்கள்.
New
Installation என்று இருக்கும் Link ஐ க்ளிக் செய்யுங்கள்.பின்
படிப்படியாக Installation செயல்முறையை செய்து முடியுங்கள்.

Wordpress Theme தேர்ந்தெடுங்கள்
Wordpress
install செய்த பிறகு, புதிய இணையதளத்திற்கு Theme
தேர்வு
செய்யுங்கள். பொதுவாக Theme ஐ தேர்ந்தெடுக்க கீழ்கண்டவற்றை பற்றி ஆராய்ந்து
கொள்ளுங்கள்.
- புதிய Theme
ஐ தேர்ந்தெடுக்க செலவு செய்ய வேண்டுமா? இல்லையா?
- Mazine
style or text style Theme-அ என தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள்?
- உங்களின்
இணையதளத்தில் அதிக எழுத்து வேலை செய்வீர்களா?
- உங்களின்
இணையதளத்தை பயன்படுத்தி பணம் சம்பாதிக்க விரும்கிறிர்களா?
மேற்கண்டவற்றை
ஆராய்ந்து உங்களின் புதிய இணையதளத்திற்கு Theme தேர்வு செய்துவிட்டீர்கள் எனில் புதிய
இணையதளத்தை உருவாக்கி விட்டீர்கள். இப்போது அதிக கட்டுரைகளை எழுதி உங்களின்
பக்கதில் பகிருங்கள்.