Pages

Web Hosting தேர்ந்தெடுப்பது எப்படி

Posted On 31 Dec 2014
Web Hostingஇணையதளத்தில் பகிர்ந்து கொள்ளப்படும் கட்டுரைகள், புகைப்படங்கள், வீடியோ காட்சிகள் அல்லது கட்டுரைகளை சேமித்து வைக்கும் மற்றொரு கணினி ஆகும். உதாரணமாக  தொலைபேசியில் நீங்கள் சேமித்து வைக்கும் ஒவ்வொரு பாடல் , புகைப்படங்கள் மற்றும் பல தொகுப்புகளை சேமித்து வைக்க இடம் (அதாவது, Memory Card) தேவைப்படுகிறது. இதைப்போலவே நீங்கள் இணையதளத்தில் பகிரும் ஒவ்வொரு கட்டுரையும், புகைப்படத்தியும், வீடியோ பதிவுகளையும் மற்றும் பல புரொகிராமிங் கோடுகளையும் சேமித்து வைக்க ஒரு இடம் தேவைப்படுகிறது. இதையே நாம் வெப் ஹொஸ்டிங்(Web Hosting) என கூறுகிறோம்.

புதியதாக இணையதளம் ஆரம்பிப்பவர்களுக்கு வெப் ஹொஸ்டிங் தேர்ந்தெடுப்பது ஒரு சவாலாகவே திகழ்கிறது.இணையத்தில் ஏராளமான நிறுவனங்கள் வெப் ஹொஸ்டிங் சேவையை வழங்குகின்றன. ஏறக்குறைய அனைத்து நிறுவனங்களும் ஒரே மாதிரியான வாக்குறுதிகளையே வழங்குகின்றன. இவற்றில் பெரும்பாலான நிறுவனங்கள் தங்களிடம் இருக்கும் குறைகளை ஒப்புக்கொள்வது இல்லை.  இந்த பயிற்சி கட்டுரையின் மூலம் சிறந்த வெப் ஹொஸ்டிங் தேர்ந்தெடுப்பது, மற்றும் அவற்றை தேர்ந்தெடுக்கும் போது நாம் நினைவில் கொள்ள வேண்டிய சில அடிப்படைகளை காண்போம்.


நம்பகத்தன்மை மற்றும் வேகம்

ஒரு நிறுவனத்தின் வெப் ஹொஸ்டிங் நம்பகத்தன்மை மற்றும் வேகமாகவோ செயல்படகூடியதாக இருந்தால் மட்டும் போதாது, அதன் இயக்க நேரம்(uptime)
சிறந்ததாக இருக்கவேண்டும். குறந்தபட்ச இயக்க நேரம் 99% இருக்கவேண்டும். 99% என்பதே குறைந்த அளவு தான், இது சாதாரணமாக 99.5% அல்லது அதற்கு மேற்பட்டதாக இருக்க வேண்டும். என்வே இயக்க நேரத்தை தேர்ந்தெடுக்கும் போது கவன்மாக இருக்கவேண்டும்.

தரவு மாற்றம்(Data Transfer)

தரவு மாற்றம் என்பது "traffic" or "bandwidth" என்ற கூறப்படுகிறது அல்லது அழைக்ப்படுகிறது. தரவு மாற்றம் என்பது உங்களின் இணையதளத்தை ஒரு முகவர் உலவும்(browse) போது  இணையதளத்தில் இருந்து முகவருக்கு மாற்றம் செய்யப்படும் அல்லது அனுப்பப்படும் பைட்(bytes)களின் மொத்த எண்ணிக்கை ஆகும். அதாவது உங்களின் இணையதளத்தில் முகவர் பார்க்கும் ஒவ்வொரு பக்கமும் Load ஆக சிறிது பைட்கள் தேவைப்படும். இவ்வாறாக ஒரு நாளைக்கு அனைத்து முகவர்களும் பார்க்க ஆகும் மொத்த அளவு "traffic" or "bandwidth" என அழைக்கப்படுகிறது.

பெரும்பாலான நிறுவனங்கள் Unlimited "traffic" or "bandwith" என வாக்குறுதிகளை அளிக்கின்றன. நீங்கள் Unlimited என்ற வாக்குறுதியை நம்பாதிர்கள், Unlimited என்பது ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே ஆகும், இதைத்தாண்டி உபயோகிக்கும் ஒவ்வொரு அளவிற்கும் உங்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும். எனவே தரவு மாற்றம் தேர்ந்தெடுக்கும் போது மிக கவனமாக இருங்கள்.


Disk Space

bandwidth போல பல நிறுவனங்கள் Disk Space  Unlimited ஆக வழங்ககுகின்றன. உங்களின் இணையதளத்தின் அளவை பொருத்தே Disk Space தேவைப்படும். புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகள் இல்லாத சாதாரண  இணையதளத்திற்கு 20 MB இடம் போதுமானது. எனவே உங்களின் இணையதளத்தின் அளவைப்பொருத்து Disk Space ஐ தேர்ந்தெடுங்கள்.

தொழில் நுட்ப ஆதரவு(Technical support)

ஒரு நாளைக்கு 24 மணி நேரமும் , ஒரு வாரத்திற்கு 7 நாளும் தொழில் நுட்ப ஆதரவு தரும் நிறுவனத்தை தேர்ந்தெடுங்கள். உங்களின் வெப் ஹொஸ்டிங்கில் எப்போது பிரச்சனை ஏற்படும் என்பது தெரியாது எனவே 24/7 தொழில் நுட்ப ஆதரவு அவசியமாகும்.

Control Panel

வெப் ஹொஸ்டிங் நிறுவனத்தில் உங்களின் கணக்கை கையாளும் பக்கத்திற்கு Control Panel என்று பெயர். இது வெவ்வேறு நிறுவனத்தில் வெவ்வேறு  பெயரில் அழைக்கப்படுகிறது. உங்களின் கணக்கு சம்மந்தமான பல்வேறு திருத்தங்களை செய்யலாம். எனவே இது கையாளுவதற்கு எளிமையானதாக இருக்க வேண்டும்.

Multiple Domain Hosting and Subdomains

இந்த வசதியின் மூலம் நீங்கள் பல புதிய இணையதளத்தை உங்களின் வெப் ஹொஸ்டிங் கணக்கில் சேர்த்து கொள்ளலாம். மற்றும் பல Subdomains ஐ சேர்த்து கொள்ளலாம். வெப் ஹொஸ்டிங் திட்டங்களுக்கு ஏற்ப நீங்கள் இரண்டு முதல் பல புதிய இணையதளத்தை சேர்க்கலாம்.


Email, Autoresponders, POP3, Mail Forwarding

உங்களின் இணையதளத்தின் பெயரில் நீங்கள் புதிய மின்னஞ்சல் முகவரிகளை பெறலாம். உதாரணமாக, பெயர்@இணையதளம்.காம். 
Autoresponders உங்களை எளிமையாக மின்னஞ்சல்களை அனுப்ப உதவுகிறது.

மாதம்/காலாண்டு/ஆண்டு கட்டணம்.

பெரும்பாலான நிறுவனங்கள் நீங்கள் ஆண்டுக்கான முழு கட்டணம் செலுத்த பல சிறப்பு சலுகைகளை அளிக்கும். இது குறித்து நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். மாத கட்டணத்தை செலுத்துங்கள் அல்லது தேர்ந்தெடுங்கள் ஏனெனில் உங்களுக்கு பிடிக்கவில்லை எனில் வெளியேறி விடலாம். பிடிக்கும் பட்ட்சத்தில் மாத கட்டணத்தில் இருந்து ஆண்டு கட்டணத்திற்கு மாறுங்கள். 


மேலும் Web Hosting குறித்த பல புதிய தகவல்களுக்கு உங்களின் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்.