Posted On 28 Dec 2014
அனைத்து இணைத்தளத்திற்கும் Domain
Name அவசியமானது. Domain
Name ஒரு இணையதளத்திற்கு
அடித்தளமாக அமைகிறது ஒரு இணையதளத்தை அழைக்கவோ அல்லது அது World
Wide Web-ல் இடம் பெறவோ அதற்கு Domain Name அவசியமாகும். எடுத்துகாட்டாக
Amazon இணையதளத்தை பார்க்க நீங்கள் www.amazon.com
என்ற
சரியான Domain
Name -ஐ
குறிப்பிட வேண்டும். புதியதாக இணையதளத்தை தொடங்க இருப்பவர் முதலில் செய்ய
வேண்டியது Domain Name தேர்ந்தெடுத்தல் ஆகும். இதுவே உங்களின்
இணையதளத்தை பற்றி மற்றவர்களுக்கு எடுத்து கூற இருப்பது மேலும் Domain
Name கூகுள்
தேடலில் மிக அதிக பங்கு வகிக்கிறது. ஒரு இணையதளத்தை பார்ப்பவருக்கு முதலில் தோன்றுவது இணையதளத்தின் பெயர், அதாவது Domain
Name ஆகும்.
நீங்கள் உங்களின் இணையதளத்தை பார்க்க வருபவரை முதலில் கவரக்கூடியது.
வாடிக்கையாளர்களை கவர்ந்தாலும், மறுமுனையில் கூகுள் Crawlers Domain
Name வைத்தே கூகுள் தேடலில் உங்களின் இணையத்தளத்தை முதல்
பக்கத்தில் காட்சி படுத்த உதவும். என்வே நீங்கள் கூகுள் தேடல்
இயந்திரத்திற்கு உங்களின் இணையதளம் எதைப்பற்றியது மற்றும் அதில் இருக்கும்
கட்டுரைகள் எதைப்பற்றியது என விளக்க வேண்டும். இதை உங்களின் Domain
Name சரிவர
செய்யும் எனவே இணையதளத்திற்கு Domain Name தேர்ந்தெடுத்தல் மிகவும்
அவசியமாகும்.
Domain
Name என்பது என்ன?
Domain Name-ல் இரண்டு பகுதிகள் உள்ளன.
முதல் பகுதி Root Domain மற்றும் இரண்டாவது பகுதி Domain
Name Extension. எடுத்துகாட்டாக Amazon-ஐ எடுத்துகொள்வோம் இதில் amazon
என்பது
Root
Domain ஆகும் மற்றும் .com
என்பது
Domain
Name Extension ஆகும். உங்கள் இணையதளத்திற்கு Root
Domain மற்றும் Domain
Name Extension ஆகிய இரண்டையும் தேர்ந்தெடுக்க வேண்டும். எனவே இதைப்பற்றிய
அடிப்படைகளை அறிந்துகொள்வது சாலச்சிறந்ததாகும்.
சிறந்த Domain
Name ஐ தேர்ந்தெடுப்பது எப்படி?
உங்களின் வியாபாரம், தொழில், அல்லது ஆலோசனைகளுக்கு
அப்பாற்பட்டு பல சிறந்த வழிமுறைகள் Domain Name ஐ தேர்ந்தெடுக்க
இருக்கின்றன.
- உங்களுக்கு சாத்தியமெனில் எப்போதும் .com
Extension பெயரை தேர்ந்தெடுங்கள். இந்த Domain Name Extension எளிமையாக
வாடிக்கையாளர்களின் மனதில் பதிவதோடு, திரும்பவும் எளிமையாக நினைவுபடுத்தி
உங்களின் இணையதளத்திற்கு வர உதவும். மேலும் .biz, .tv, .info, .website, .co போன்ற Domain
Name Extension காணப்படுகின்றன. இவை எளிதில் நினவு படுத்த முடியாததாகவும், எளிதில்
குழப்பமடையச் செய்வதாகவும் இருக்கின்றன.
- மேலும் .com Extension கொண்ட
இணையதளம் கூகுள் மற்றும் மற்ற தேடல் எந்திரங்காளால் மிகுந்த நம்பிக்கைக்கு
உரியவையாக ஏற்றுக்கொள்ளபட்டுள்ளது. .com Extension வைத்திருக்கும்
இணையதளங்கள் மற்ற Extension வைத்திருக்கும் இணையதளங்களைன்
விட, தேடல்களில்
முதலில் காட்சிபடுத்தப்படுகின்றன.
- Domain Name தேர்ந்தெடுக்கும் போது இடையில் hyppen(-) சேர்க்காதிர்கள்.
உதாரணமாக, Your-New-Website.Com. இவ்வாறு இடையில் hyppen(-) சேர்ப்பதால்
உங்களின் Domain Name நினைவுபடுத்த கடினமாகவும், தேடல்
எந்திரங்களினால் குறைந்த அளவு Page Rank மட்டுமே வழங்கப்படும்.
- .Com Extension வாங்கமுடியவில்லை எனில்
.Org அல்லது .Net போன்ற Extension களை
வாங்குங்கள், .Com அடுத்து .Org, .Net அதிக
நம்பிக்கைக்கு உரியவையாக கருதப்படுகின்றன.
- சிறிய Domain Name ஐ தேர்ந்தெடுங்கள், சிறிய பெயர்கள்
எளிதில் நினைவுப்படுத்த உதவுகின்றன. மேலும் Domain Name-ல் எண்களை
சேர்ப்பதை தவிருங்கள். (உதாரணமாக www.website123.com)
மேலும் Domain Name பற்றிய பல புதிய
தகவல்களுக்கு, எனது Newsletter Subscribe செய்யுங்கள்.