Posted On 12 Dec 2014
வலைப்பதிவு இன்றைய காலகட்டத்தில் இந்தியா மற்றும் இதர நாடுகளில் பெரும் வளர்ச்சியை கண்டுள்ளது. வலைப்பதிவு மாணவர்களின் அறிவை வளர்ப்பதோடு, இணையத்தில் வருமானம் ஈட்டவும் பயன்படுகிறது. பொதுவாக அனைவருக்கும் தோன்றுவது எப்போது வலைப்பதிவு செய்வது? அதற்கு உகந்த காலம் எது? என எண்ணற்ற கேள்விகளை தங்களுக்குள்ளேயே வினவிக்கின்றனர். ஆனால் நடைமுறையில் அப்படி எந்த ஒரு நேரத்தையும் வலைப்பதிவு செய்ய உகந்த நேரம் என கூற முடியாது. ஏனெனில் எழுதும் திறன் கொண்ட பத்து வயது சிறுவன் முதல் வயது மூப்பு அடைந்து பணியில் ஓய்யு பெற்றவர் வரை என யார் வேண்டுமானாலும் வலைப்பதிவு செய்யலாம். இந்த கட்டுரையில் ஏன் கல்லூரி மாணவர்கள் கண்டிப்பாக வலைப்பதி செய்ய வேண்டும் மற்றும் ஏன் இதை கல்லூரியில் பயிலும்போது தொடங்கவேண்டும் என விரிவாக ஆராய்வோம்.
வலைப்பதிவு இன்றைய காலகட்டத்தில் இந்தியா மற்றும் இதர நாடுகளில் பெரும் வளர்ச்சியை கண்டுள்ளது. வலைப்பதிவு மாணவர்களின் அறிவை வளர்ப்பதோடு, இணையத்தில் வருமானம் ஈட்டவும் பயன்படுகிறது. பொதுவாக அனைவருக்கும் தோன்றுவது எப்போது வலைப்பதிவு செய்வது? அதற்கு உகந்த காலம் எது? என எண்ணற்ற கேள்விகளை தங்களுக்குள்ளேயே வினவிக்கின்றனர். ஆனால் நடைமுறையில் அப்படி எந்த ஒரு நேரத்தையும் வலைப்பதிவு செய்ய உகந்த நேரம் என கூற முடியாது. ஏனெனில் எழுதும் திறன் கொண்ட பத்து வயது சிறுவன் முதல் வயது மூப்பு அடைந்து பணியில் ஓய்யு பெற்றவர் வரை என யார் வேண்டுமானாலும் வலைப்பதிவு செய்யலாம். இந்த கட்டுரையில் ஏன் கல்லூரி மாணவர்கள் கண்டிப்பாக வலைப்பதி செய்ய வேண்டும் மற்றும் ஏன் இதை கல்லூரியில் பயிலும்போது தொடங்கவேண்டும் என விரிவாக ஆராய்வோம்.
கல்லூரி
மாணவர்கள் வலைப்பதிவு செய்வதற்கு அவர்களுக்கு அடிப்படை தேவையாக அமைவது தொழில்நுட்ப
அறிவாகும். பொறியியல் கல்லூரி மாணவர்கள் மற்றும்
தொழில்நுட்ப விருப்ப பாடங்களை பயிலுவோர்க்கு
வலைப்பதிவு எளிமையானதாக இருக்கும். மற்ற மாணவர்களை விட இவர்களுக்கு அதிகமாக
தொழில்நுட்ப அறிவு சக மாணவர்களாலும் மற்றும் கல்லூரி ஆசிரியர்களாலும் கிடைக்க
வாய்ப்பிருக்கிறது. எனவே கல்லூரியில் பயிலும் போது வலைப்பதிவு செய்வது உங்களை ஒரு
தொழில்முனைவோராக மாற்ற ஊன்றுகோலாக அமையும்.
வலைப்பதிவு
செய்வது உங்களை தொழில்சார்ந்த வல்லுனராக்குவதோடு, நீங்கள் வேலையை
தேடும்போது இது உங்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்கும். மேலும் மற்ற மாணவர்களை விட
நீங்கள் சிறந்து விளங்குவதோடு, இளம் வயதிலேயே நீங்கள் ஒரு நிறுவனத்தை
ஆரம்பித்து,
உச்சத்தை தொடவும் உதவும். இந்தியாவின் முதல் தொழில்சார்ந்த
வலைப்பதிவு வல்லுனர்களில் ஒருவர் அமித் அகர்வால், இவர் IIT ல்
பொறியியல் துறையை படுத்து பட்டம் பெற்றவர் ஆவார். இதுமட்டுமல்லாது பல
வலைபதிவாளர்கள் தாங்கள் தொழில் நுட்ப துறையில் படித்து பட்டம் பெற்றவர்கள் என
ஒப்புக்கொள்கின்றனர். இனி ஏன் பொறியியல் மாணவர்கள் கண்டிப்பாக வலைப்பதி
செய்யவேண்டும் என்பதை விரிவாக் காண்போம்.
ஏன் பொறியியல் மாணவர்கள் கண்டிப்பாக
வலைப்பதி செய்யவேண்டும்?
வலைப்பதிவு
என்பது உங்களின் திறனை வளர்ப்பதோடு மட்டும் நில்லாது, வலைப்பதிவானது
உங்களின் வருமானத்தையும் கொடுக்க கூடியது. நாம் இப்போது ஒரு சிறிய மதிப்பீடு
செய்வோம். நீங்கள் உங்களின் முதலாவது, இரண்டாவது வருடத்தில் வலைப்பதிவு
செய்ய தொடங்குகிறீர்கள் எனக் கொள்வோம். மாதம் 15 கட்டுரைகளை வலைப்பதிவு
செய்வீர்கள் எனில்,
15*12 = 180
15*48 = 720(4 வருடத்திற்கு)
இப்போது
உங்களின் வலைப்பதிவிற்கு தேவையைவிட அதிகமான கட்டுரைகள் உள்ளன. உங்களின் உங்களின்
வலைப்பதிவில் Google
Adsense உபயோகிக்கிறீர்கள் எனில் உங்களின் மாத வருமானம்
சுமார் $3000
அமெரிக்க டாலரிலிருந்து $5000 அமெரிக்க டாலர் வரை இருக்கும்.
உங்களின் கல்லூரி படிப்பை முடித்தவுடன் கணிசமான வருமானம் ஈட்டுவதோடு, ஒரு
தொழில் முனைவோராகாவும் இருப்பீர்கள்.
வலைப்பதிவு செய்ய பொறியியல் மாணவர்களுக்கு
அடிப்படையானவையாக கருதப்படுவது
வலைப்பதிவு செய்ய ஆர்வம்
எந்த
ஒரு தொழிலோ அல்லது பணியோ செய்ய ஆர்வம் தேவை, குறிப்பாக தொழில் நுட்பம்
சார்ந்த தலைப்புகளில் ஆர்வம் கொண்டவர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் நிச்சயம்.
சரியான தொலை நோக்கு பார்வை, உங்களின் ஆர்வம் மிகுந்த துறையில் சிறந்து
விளங்குதல் இருந்தால், உங்களின் வெற்றியை யாராலும் தடுத்து நிறுத்த
முடியாது. உங்களுக்கு தேவையானது அனைத்தும் ஆர்வம், சரியான பாதை மற்றும்
நேரம் மட்டுமே உங்களின் வாழ்க்கையை முன்னேற்ற போகும் முதலீடு.
பணத்தேவை
பள்ளி
மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை அனைவரும் தங்களின் பணத்தேவையை பூர்த்தி
செய்ய பகுதி நேர வேலையை செய்கின்றனர். திறன் மிகுந்த நீங்கள் ஏன் வலைப்பதிவை
உங்களின் பிரதான வருமானம் ஈட்டும் வழியாக தேர்ந்தெடுக்க கூடாது. உங்களின் நான்கு
வருட வலைப்பதிவு முடிவில் நீங்கள் எதிர்பார்க்கும் முழு நேர வருமானத்தை விட அதிக
வருமானம் ஈட்டலாம். வலைப்பதிவின் முக்கியதுவத்தை அறிந்த பலர் இனறு அவர்களின் முழு
நேர வேலையை விடுத்து, வலைப்பதிவையே முழு நேர வேலையாக செய்து
வருகின்றனர். வலைப்பதிவு உங்களின் பொருளாதார அளவை உயர்த்தும் என்பதில் எந்த வித
ஐயப்பாடும் இல்லை.
Read:வலைப்பதிவின் மூலம் இணையத்தில் பணம் சம்பாதிக்கும் வழிமுறைகள்
வலைப்பதிவில்
வெற்றி அடைந்தவரின் வெற்றி ரகசியங்களை படியுங்கள்
அமித்
அகர்வால் முதல் எண்ணற்ற தொழில்சார்ந்த வலைப்பதிவாளர்கள் உள்ளனர். அவர்கள்
வலைப்பதிவில் வெற்றியடைந்தற்கான காரணம் மற்றும் ஒரு வலைப்பதிவாளருக்கு தேவையான திறன்கள், அவர்களை
சாதிக்க தூண்டிய உந்து சக்திகள் போன்ற பல காரணிகளை இளம் தலைமுறை
வலைப்பதிவாளர்களுக்கு பகிர்ந்துகொள்கின்றனர். இது போன்று தொழில்சார்ந்த
வல்லுனர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் பயிற்சி கட்டுரைகளை படிப்பதன் மூலம்
உங்களின் தன்னம்பிக்கை உயரும். மேலும் அவர்கள் எதிர்கொண்ட தடைகள், அவற்றை
எளிதாக எதிர்கொள்ளும் திறன் போன்றவைகளை பகிர்கின்றனர்.
தொழில்
நுட்ப திறனை வளருங்கள்
பெரும்பாலான
பொறியியல் மாணவர்கள் Web Design, My Sql, CSS போன்ற தொழில் நுட்ப
பாடங்களை படிக்கின்றனர். இது அவர்கள் வலைப்பதிவிற்கு பயன்படும் எளிய இணையதளங்களை
உருவாக்குவதற்கு பயன்படும். வலைப்பதிவிற்கு தொழில் நுட்ப அறிவு மிகவும்
இன்றிமையாதது ஆகும். தொழில் நுட்ப அறிவு உங்களை வலைப்பதிவு செய்தலில் நிலைத்து
இருக்க செய்யும். மேலும் வளர்ந்து வரும் தொழில் நுட்ப மாறுதலுக்கு ஏற்ப மாற
உதவும்.
முகநூலில்
தினம் 100 அமெரிக்க
டாலர் வருமானம் ஈட்டும் வழிகளை ஆராயும் இலவச இ-புத்தகம் " முக நூலில் தினம் $100 வருமானம்
ஈட்டும் வழிமுறைகள் " பெற உங்களின் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியினை
பதிவு செய்யவும்.