ஆன்லைன் டேட்டா என்ட்ரி வேலைகள் மூலம் இணையத்தில் வருமானம் ஈட்டும் வழிகள்:
Posted On 7 Dec
2014
எனது முகநூல் நண்பர் ஒருவர் என்னிடம் ஆன்லைன் டேட்டா என்ட்ரி
வேலைகள் குறித்த அவரது சந்தேகங்களை
கேட்டறிந்தார். அவர் என்னிடம் கேட்ட அந்த கேள்விகளே இந்த கட்டுரையை எழுத
தூண்டியது. அவர் பொறியியல் பட்டப்படிப்பை கணினி அறிவியல் துறையில் முடித்து
வேலைக்காக முயற்சி செய்து கொண்டு இருந்தார். அவர் என்னிடம் கேட்ட கேள்விகளை
விளக்கினாளே டேட்டா என்ட்ரி குறித்த தகவல்கள் பெரும்பாலும் அடங்கிவிடும். அவர்
என்னிடம் கேட்ட முதல் கேள்வி.
ஆன்லைன் டேட்டா என்ட்ரி
வேலைகள் நிஜமாகவே உண்மைதானா?
இந்த கேள்வி அவருக்கு மட்டும் அல்ல பெரும்பாலும் ஆன்லைனில் வருமானம் ஈட்ட தொடங்குபவர்கள் அனைவருக்கும் எழக்கூடியது.
இந்த கேள்விக்கு பதில் ஆன்லைன் டேட்டா என்ட்ரி வேலைகள் உண்மையானது தான். ஆனால்
அனைத்து டேட்டா என்ட்ரி வேலைகள் வழங்கும் இணையதளங்களும் உண்மையானதா என்றால் இல்லை.
இணையத்தில் பெரும்பாலான இணையதளங்கள் ஆன்லைன் டேட்டா என்ட்ரி வேலைகள் வழங்குகின்றன.
அவை அனைத்தும் உண்மையானது இல்லை.
உண்மையான ஆன்லைன் டேட்டா என்ட்ரி வேலை வழங்குபவர்கள் எவ்வளவு கட்டணம் வசூலிப்பார்கள்?
இது அவரது அறியாமையே விளக்கியது. எந்த ஒரு உண்மையான டேட்டா
என்ட்ரி வழங்கும் இணையதளமும் உங்களிடம் கட்டணம் வசூலிக்காது. எனென்றால் வேலை
கொடுப்பவர் தான் வேலை செய்பவர்களுக்கு வேலையை செய்தற்கான கட்டணத்தை தர வேண்டும்
என்பது உலகறிந்த உண்மை. எனவே எந்த ஒரு உண்மையான டேட்டா என்ட்ரி வேலை வழங்கும் எந்த
ஒரு நிறுவனமும் உங்களிடம் திறமையை எதிர்பார்ப்பார்களே தவிர எந்தவித கட்டணத்தையும்
கேட்கமாட்டார்கள். எனவே எந்த டேட்டா என்ட்ரி வேலை வழங்கும் இணையதளத்திற்கும் கட்டணம் செலுத்த வேண்டாம்.
போலியான ஆன்லைன் டேட்டா
என்ட்ரி வேலைகள் எவ்வாறு கண்டறிவது?
- உண்மையான ஆன்லைன் டேட்டா என்ட்ரி வேலை தரும் நிறுவனமும் எந்தவித கட்டணத்தையும் வசூலிக்காது.
- அவர்கள் உங்களிடம் பயிற்சி வகுப்புகள், வேலை செய்ய தேவையான மென்பொருள் போன்றவற்றை உங்களிடம்
பணத்திற்காக விற்க முயற்சிப்பார்கள்.
- சில நேரங்களில் அவர்களின் தொடர்பு தகவல் தவறாக
இருக்கும்.
- எதாவது ஒரு இடத்தில் உங்களிடம் கட்டணத்தை கேட்கலாம், அதாவது உங்களுக்கு வைகப்படும் தேர்வு தொகை, வரி என எதாவது ஒரு இடத்தில் கட்டணத்தை வசூலிக்க
முயலுவார்கள்.
கட்டணம் வசூலிக்கும் அனைத்து இணையதளங்களும் போலியனவையா?
இல்லை. சில நிறுவனங்கள் கட்டணத்தை வசூலிக்கின்றன டேட்டா என்ட்ரி வேலை மற்றும் அதற்கான கூலியையும் கொடுக்கின்றன.
அனால் இவற்றில் பெரும்பாலும் ஒரு குறைந்த 2000 ரூபாய் வருமானத்தை பெற சுமார்
இரண்டு முதல் மூன்று மாதம் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். எனவே கட்டணத்தை
செலுத்தி அதை திரும்ப சம்பாதிக்கவே அதிக நேரம் பிடிக்கும். எனவே டேட்டா என்ட்ரி
வேலைகளுக்கு கட்டணம் செலுத்துவது புத்திசாலித்தனமான ஒன்று இல்லை.
அவர் அடுத்தாக கேட்டது "
உங்களுக்கு தெரிந்த சில உண்மையான டேட்டா என்ட்ரி இணையதளங்கள்?"
VirtualBee.com
நான் ஆன்லைனில் ஆரம்பகட்டத்தில் Virtual
Bee( early called as Key for Cash)
என்ற டேட்டா என்ட்ரி இணையதளத்தை பயன்படுத்தி வந்தேன். இதில்
எந்த வித கட்டணமும் வசூலிக்கபடாது. உங்களை குறித்த அடிப்படை தகவல்களை கொடுத்து
பதிவு செய்துகொள்ள வேண்டும். இந்த இணையதளம் உலகளவில் அனைவராலும்
பயன்படுத்தப்படுகிறது. இதில் நீங்கள் மூன்று விதமான தேர்வுகளை எழுதவேண்டும். இந்த தேர்வின்
அடிப்படையில் உங்களுக்கு புள்ளிகள் கொடுக்கப்படும். அதிகபட்ச புள்ளிகளை
பெற்றவர்களுக்கு டேட்டா என்ட்ரி வேலை கொடுக்கப்படும். இந்த தேர்வை நீங்கள் 24 மணி
நேரத்திற்கு ஒரு முறை எழுதலாம். உங்களால் இந்த தேர்வில் தேர்ச்சி பெற முடிந்தால்
உங்களுக்கு வேலை நிச்சயம். மேலும் எந்தவித தடங்கலும் இல்லாமல் உங்களின் ஊதியம்
உங்களுக்கு வழங்கப்படும். இந்த இணையதளத்தை பார்வையிட
AmazonMTurk.Com
அடுத்தாக நான் உங்களுக்கு பரிந்துரைக்கும் இணையதளம் அமெசான்
எம் டர்க்(Amazon MTurk) இந்த இணையதளமானது பல்வேறு
சிறு வேலைகளை கொண்டுள்ளது. இதில் டேட்டா என்ட்ரி வேலைகளும் அடங்கும். பெரும்பாலான
நேரங்களில் இந்த இணையதளத்தில் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்வதில்லை. இதில் உங்களை
பதிவு செய்தவுடன், உங்களுக்கு ஒரு மின்னஞ்சல்
அனுப்பபடும். உங்களின் அழைப்பு ஏற்றுகொள்ளப்பட்டால் நீங்கள் log
in உங்களின் வேலையை தொடங்கலாம். இல்லையெனில்
உங்களின் அழைப்பு நிராகரிக்கபட்டதற்கான மின்னஞ்சல் உங்களுக்கு அனுப்பப்படும்.
பெரும்பாலான நேரங்களில் புதிய அழைப்புகளை ஏற்பதில்லை. மேலும் சில குறிப்பிட்ட
நாடுகளில் இருந்தும் இவர்க்ள் அழைப்புகளை ஏற்ப்பதில்லை. ஒருவேளை உங்களின் அழைப்பு
ஏற்றுக்கொள்ளப்பட்டால், உங்களின் முழு நேர வேலையை
விட அதிகம் இங்கே வருமானம் ஈட்டலாம். இந்த இணையதளத்தை பார்வையிட AmazonMTurk
CrowdCloud.Com
மூன்றாவதாக நான் உங்களுக்கு பரிந்துரைப்பது CloudCrowd இணையதளமாகும். இதுவும் Amazon
MTurk போன்றே பெரும்பாலான நேரங்களில் இந்த
இணையதளத்தில் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்வதில்லை. ஒருமுறை உங்களது அழைப்பு
அங்கரிக்கப்பட்டால் நீங்கள் அதிக வருமானம் ஈட்டுவது நிச்சயம். Amazon
MTurk மற்றும் CrowdCloudசேர நீங்கள் அவர்கள் ஆட்களை
ஏற்றுக்கொள்ளும் போது முயற்சி செய்யவேண்டும். இந்த இணையதளத்தை பார்வையிட Crowdcloud
மேலும் இந்த கட்டுரை ஆன்லைனில் டேட்டா என்ட்ரி வேலை
தேடுபவர்களுக்கு பெரிதும் உதவும் என நம்புகிறேன். எனது அடுத்த கட்டுரைகளுக்கு இந்த
இணையதளத்தை புக் மார்க் செய்துகொள்ளவும்.
முகநூலில்(Facebook) தினம் $100(6000 இந்திய ரூபாய்)
சம்பாதிக்கும் வழிமுறைகளை விரிவாக தெளிவுபடுத்தியுள்ள எனது இ-புத்தகம் " முகநூலில்(Facebook) தினம் $100 அமெரிக்க டாலர்
சம்பாதிக்கும் வழிமுறைகள் " புத்தகத்தை பெற உங்களின் பெயர் மற்றும் மின்னஞ்சல்
முகவரியை பதிவுசெய்யவும்.