Pages

வலைப்பதிவின் மூலம் இணையத்தில் பணம் சம்பாதிக்கும் வழிமுறைகள்

Posted On 14 Dec 2014
வலைப்பதிவின் மூலம் இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டுமா? ஆம் எனில் நீங்கள் மட்டும் தனியாக இல்லை. பல எண்ணிலடங்கா வலைப்பதிவாள்ர்கள் உங்களுடன் போட்டியில் உள்ளனர். பல வலைப்பதிவாளர்கள் வலைப்பதிவு ஒரு இலாபகரமான ஒன்று என ஒப்புக்கொள்கின்றனர். பல ஆயிரக்கணக்கான வலைப்பதிவாளர்கள் தங்களின் முழு நேர வேலையாக வலைப்பதிவு செய்கின்றனர், இவர்களில் பெரும்பாலனோர் தங்களின் வாழ்க்கை தரத்தை வலைப்பதிவு செய்ததன் மூலமாகவே உயர்த்தியதாக கூறுகின்றனர். இந்த கட்டுரையின் மூலம் வலைப்பதிவில் எந்ததெந்த முறையில் பணம் சம்பாதிக்க முடியும் என்பதை பார்ப்போம்.

கற்பனைகளை உடைத்தெறிந்து உண்மையை ஆராய்வோம். வலைப்பதிவு செய்யும் அனைவரும் செல்வந்தர்களாகவோ அல்லது கோடிகளில் புரல்பவராகவோ மாறுவது இல்லை. இது கேட்பதற்கு சற்றே கடினமாக  இருந்தாலும் இதுதான் உண்மை. சில வலைப்பதிவு பல மடங்கு வருமானத்தை கொடுக்கலாம், பெரும்பாலான வலைப்பதிவு வருமானத்தை ஈட்ட முடியாததாக உள்ளது. இதற்கு காரணம் அவர்கள் வலைப்பதிவு செய்ய தேர்ந்தெடுக்கும் தலைப்பு முதலிய பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றை அடுத்து வரும் கட்டுரைகளில் பார்ப்போம். பின்வரும் முறைகளில் ஒருவர் வலைப்பதிவின் மூலம் இணையத்தில் பணம் சம்பாதிக்க முடியும். கீழ்கண்ட ஒவ்வொரு முறைகளும் 100 சதவீதம் வருமானத்தை தரக்கூடிய சிறந்த முறைகளாகும்.


அட்சென்ஸ்(Adsense)


ஆன்லைனில் பணம் சம்பாதிக்க
பெரும்பாலான வலைப்பதிவாளர்கள் தங்களின் வலைப்பதிவில் அட்சென்ஸ்சை பயன்படுத்துகின்றனர். அட்சென்ஸ் கூகுள் நிறுவனத்தால் வலைப்பதிவில் விளம்பரங்களை வெளியிட்டு வருமானத்தை தருகின்றனர். உங்களின் வலைப்பதிவு அட்சென்ஸ்க்கு விதிகளுக்கு உட்பட்டு விளம்பரங்களை வெளியிட தகுதி பெறுமானால், உங்களின் வலைப்பதிவிற்கு வரும் வாசகர்களை பொருத்து நீங்கள் குறிப்பிடத்தக்க வருமானத்தை பெறலாம். மேலும் அட்சென்ஸ் மூலம் பணம் சம்பாதிக்கும் விரிவான தகவல்களுக்கு Adsense மூலம் இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி என்ற கட்டுரையை படிக்கவும்.

அப்லியேட் புரோகிராம்(Affiliate program)


நீங்கள் உங்களின் இணையதளத்தில் பல விதமான அப்லியேட் புரோகிராம்களை இயக்கலாம். சிறந்த தரமான பொருள்களை அல்லது சேவைகளை ஊக்குவிப்பதன் மூலம் வருமானம் மற்றும் உங்களின் மீதான நம்பிக்கையும் உயரும். பெரும்பாலான வலைப்பதிவாளர் அப்லியேட் புரோகிராம் மூலம் இணையத்தில் பணம் சம்பாதித்து வருகின்றனர். அப்லியேட் புரோகிராம் பற்றி மேலும் அறிய அப்லியேட்(Affiliate) புரோகிராம் மூலம் ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது எப்படி  கட்டுரையை படிக்கவும்

இ-புத்தகம் விற்பனை செய்தல்


உங்களின் வலைப்பதிவில் இ-புத்தகம் விற்பனை செய்வதன் மூலம் நீங்கள் கணிசமான வருமானத்தை ஈட்டலாம். நீங்கள் நன்றாக தேர்ந்த ஒரு தலைப்பு  எடுத்து இ-புத்தகம் எழுதி அதை உங்களின் வலைப்பதிவில் விற்பனை செய்யுங்கள். முதல் முறையாக இ-புத்தகம் எழுத இருப்பவர்கள் "ஆன்லைன் வேலைகள்: இ-புத்தகம் எழுதுதல்" என்ற எனது கட்டுரையை படிக்கவும்.

தனி நபர் விளம்பரம்(Private ad sales)


நீங்கள் உங்களின் வலைப்பதிவில் உள்ள இடங்களை தனி நபரை விளம்பரம் செய்ய அனுமதிப்பதால், வலைப்பதிவின் மூலம் இணையத்தில் அதிக பணம் சம்பாதிக்க முடியும். உங்களின் வலைப்பதிவில் விளம்பரம் செய்ய விரும்புவர்களுக்கு நீங்கள் விற்கலாம் அல்லது நீங்களாகவே அவர்களை சந்தித்து உங்களின் வலைப்பதிவில் விளம்பரம் செய்ய அழைக்கலாம். இது உங்களின் வருமானத்தில் பெரும்பகுதியை ஈட்டி தரும்.

சிட்டிகா(Chitika)


சிட்டிகா மிகவும் சிறப்பாக செயல்படுவதாக பல வலைப்பதிவாளர்கள் ஒப்புக்கொள்கின்றனர். சிட்டிகா அட்சென்ஸ் போல விளம்பரங்களை உங்களின் வலைப்பதிவில் இயக்க, அதற்கான பணத்தை உங்களுக்கு வழங்கும். அட்சென்ஸ்க்கு தகுதி பெற முடியாதவர்கள் சிட்டிகாவில் முயற்சி செய்து பார்க்கலாம். இது  இணையத்தில் உங்களின் வருமானத்தை சற்று உயர்த்தும்.

அமெசான் அசோசியட்(Amazon Associates)


அமெசான் அப்லியேட் புரோகிராம் பெரும்பாலான வலைப்பதிவாளர்களின் வருமானத்தில் பெரும்பங்கு வகிக்கிறது. இதில் உள்ள பொருள்களை உங்களின் அப்லியேட் லிங்க் பயன்படுத்தி விற்பனை செய்வதன் மூலமாக கமிசன் தொகையை பெறலாம். உங்களின் வலைப்பதிவின் பக்கங்களை பார்ப்பவர்கள் அதிகம் எனில் உங்களின் வருமானமும் அதிகம். அமெசான் அசோசியேட் கண்டிப்பாக அனைத்து வலைப்பதிவாளர்களும் உபயோகிக்க வேண்டும். 

மேலே குறிப்பிட்ட முறைகளை விட சில வழிகள் வலைப்பதிவின் மூலம் இணையத்தில் பணம் சம்பாதிக்க உதவுகின்றன. ஆனால் அவை சிறு, சிறு இணையதளங்கள் மேலும் குறைந்த அளவே வருமானத்தை ஈட்ட கூடியது.

முக நூலில் தினம் $100 சம்பாதிக்கும் வழிமுறைகளை விளக்கியுள்ள எனது இலவச இ-புத்தகம் " முக நூலில் தினம் $100 சம்பாதிக்கும் வழிமுறைகள்"  பெற உங்களின் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்.