Pages

இலவச வலைப்பதிவை( Blog) BlogSpot.com மூலம் உருவாக்குவது எப்படி

Posted On 15 Dec 2014
ஒரு வலைப்பதிவின் மூலம் நீங்கள் விரும்பும் அனைத்தையும் மற்றவர்களிடம் பகிர்ந்தகொள்ளலாம். அதுமட்டுமல்லது நீங்கள் ஒரு திறமைசாலி எனில் வலைப்பதிவின் மூலம் இணையத்தில் பணம் சம்பாதிக்கலாம்.வலைப்பதிவு செய்ய விரும்பும் அல்லது ஆன்லைனில் பணம் சம்பாதிக்க விரும்பும்  பெரும்பாலான வலைப்பதிவாளர்கள் முதலில் வினவுவது இலவசமாக எவ்வாறு வலைப்பதிவை உருவாக்குவது என்பதுதான். இந்த கட்டுரையின் மூலம் வலைப்பதிவை  BlogSpot.com  இலவசமாக உருவாக்குவது எப்படி என்பதை பற்றி பார்ப்போம்.

இணையத்தில் WordPress.Com,  Blogger.Com போன்ற சில இணையதளங்கள் வலைப்பதிவை இலவசமாக உருவாக்கும் வசதியினை வழங்குகின்றன.  Blogger.Com இணையதளத்தை உருவாக்கி இலவசமாக வலைப்பதிவு உருவாக்குவது எப்படி என விரிவாக காண்போம். ஒரு வலைப்பதிவின் மூலம் நீங்கள் விரும்பும் அனைத்தையும் மற்றவர்களிடம் பகிர்ந்தகொள்ளலாம். அதுமட்டுமல்லது நீங்கள் ஒரு திறமைசாலி எனில் வலைப்பதிவின் மூலம் இணையத்தில் பணம் சம்பாதிக்கலாம்.வலைப்பதிவு செய்ய விரும்பும் அல்லது ஆன்லைனில் பணம் சம்பாதிக்க விரும்பும்  பெரும்பாலான வலைப்பதிவாளர்கள் முதலில் வினவுவது இலவசமாக எவ்வாறு வலைப்பதிவை உருவாக்குவது என்பதுதான். இந்த கட்டுரையின் மூலம் வலைப்பதிவை  BlogSpot.com  இலவசமாக உருவாக்குவது எப்படி என்பதை பற்றி பார்ப்போம்.

இணையத்தில் WordPress.Com,  Blogger.Com போன்ற சில இணையதளங்கள் வலைப்பதிவை இலவசமாக உருவாக்கும் வசதியினை வழங்குகின்றன.

Blogger.Com இணையதளத்தை மூலம் இலவசமாக வலைப்பதிவு உருவாக்குவது எப்படி என விரிவாக காண்போம். 



முதன்முதலின் வலைப்பதிவு செய்ய விரும்புவர்கள் இலவச வலைப்பதிவை உருவாக்கி, வலைப்பதிவு செய்வது குறித்த அடிப்படைகளை கற்றுக்கொள்ளுதல் சால சிறந்ததாகும். இந்த கட்டுரையை இலவச வலைப்பதிவு செய்து இணையத்தில் பணத்தை உருவாக்க நினைக்கும் தோழர்களுக்கு உரித்தாக்குகிறேன். இந்த கட்டுரையே வலைப்பதிவை உருவாக்குவதைப் பற்றி தமிழில் விளக்கும் முதல் கட்டுரையாகும். இனி வலைப்பதிவு உருவாக்குவது எப்படி என காண்போம்.
இணையத்தில் பணம் சம்பாதிக்க

முதலில் Blogger.Com சென்று உங்கள் கூகுள் கணக்கை கொண்டு log in செய்யவும். நீங்கள் Gmail கணக்கு வைத்திருக்கவில்லை எனில் Gmail.Com சென்று இலவசமாக ஒரு கணக்கை துவங்கிக்கொள்ளவும். உங்களின் கணக்கை துவங்கியவுடன் Create New Blog  என்ற பட்டனை அழுத்தவும்.

வலைப்பதிவின் பெயர் தேர்வு செய்தல்


முதன்முதலாவதாக செய்ய வேண்டியது உங்களின் வலைப்பதிவிற்கு பெயரிடுதல். உங்களின் வலைப்பதிவிற்கு மற்ற பெயர்களில் இருந்து வேறுபடுவதும் மற்றும் நீங்கள் வலைப்பதிவு செய்ய தேர்ந்தெடுத்த  தலைப்பை ஒத்த ஒரு பெயரை தேர்ந்த்டுக்கவும். பின்னாளில் நீங்கள் இந்த பெயரை ஒரு வியாபாரக்குறி(பிராண்ட்) ஆக மாற்ற ஏதுவான பெயரை தேர்ந்தெடுக்கவும்.



இங்கு நீங்கள் உங்களின் வலைப்பதிவிற்கு ஏற்ற Template ஐ தேர்வு செய்யவேண்டும். பின்னர் நீங்கள் இதை உங்களின் விருப்பத்திற்கு ஏற்றார்போல் வேறு ஒன்றை மாற்றிக்கொள்ளலாம். இப்போது உங்களது வலைப்பதிவு உருவாக்கப்பட்டுவிட்டது ஆனால் முழுமையாக இல்லை. இன்னும் சில சிருத்தங்கள் இருக்கின்றன இது நீங்கள் வலைபதிவு செய்வதை எளிமையாக்கும். 

மேலே உள்ள படத்தில் காட்டியது போல Overview என்ற வசதியினை க்ளிக் செய்யவும். இப்போது நீங்கள் உங்களது Blogger Dashbord ல் இருக்கிறீர்கள். இப்போது நீங்கள் உங்களது கட்டுரையை எழுதி அதை வெளியிடலாம். அதற்கு முன் About Us, Contact Us போன்ற பக்கங்களை சேர்க்க Pages என்ற வசதியினை க்ளிக் செய்யவும். 


மேலே குறிப்பிட்டது போல உங்களின் Dashboard இருக்கும். இப்போது புதிய பக்க்ங்களை சேர்க்க Pages க்ளிக் செய்து உங்களுக்கு தேவையான பக்கங்களை சேர்த்து கொள்ளலாம்.  Layout வசதியினை க்ளிக் செய்து Popular Post, Newsletter Subscription, Archived Post, Social Media gadgets போன்ற பதிய gadgets களை சேர்த்துக்கொள்ளலாம்.
Settings வசதியினை தேர்ந்தெடுத்து சில அடிப்படை தகவல்களை சேர்த்துகொள்ளலாம் அல்லது மாற்றிக்கொள்ளலாம். உங்களின் வலைப்பதிவிற்கான அடிப்படை கட்டமைப்புகளை முடித்தவுடன் நீங்கள் New Post என்ற வசதியினை க்ளிக் செய்து புதிய கட்டுரைகளை எழுதி வெளியிடலாம்.

Adsense வசதியினை தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்களின் வலைப்பதிவை Adsense க்கு விண்ணப்பிக்காலம். உங்களின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளபட்டவுடன் நீங்கள் இணையத்தில் உங்களின் வலைப்பதிவின் மூலம் பணம் சம்பாதிக்கலாம்.

Read: Adsense மூலம் இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி

இது போன்று பல புதிய வலைப்பதிவை உருவாக்கி நீங்கள் இணையதளத்தில் பணம் சம்பாதிக்கலாம். மேலும் பல புதிய பதிவுகளுக்கு எனது Newsletter ல் உங்களின் பெயர் மற்றும் முகவரியினை பதிவு செய்யவும்.

மேலும் பல புதிய ஆன்லைனில் பணம் சம்பாதிக்கும் கட்டுரைகளுக்கு உங்களின் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்.