Pages

Adsense மூலம் இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி

Posted On 17 Dec 2014

இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி
Adsense ஒரு  இணையத்தில் இலவசமாக, எளிய வழியில் பணம் சம்பாதிக்க கூடிய முறையாகும். நீங்கள் இணையத்தில் பணம் சம்பாதிக்க விரும்புபவர் அல்லது வீட்டிலிருந்தே ஓய்வு நேரத்தில் பணம் சம்பாதிக்க நினைப்பவர் எனில் நீங்கள் சரியான கட்டுரையை தான் படித்து கொண்டிருக்கீறிர்கள். சரி இப்போது தலைப்புக்கு வருவோம், உங்களின் வலைப்பதிவில் அட்சென்ஸ் மூலம் உங்களின் வலைப்பதிவிற்கு தொடர்புடைய விளம்பரங்களை காட்சிபடுத்துவதன் மூலம் இணையத்தில் எளிதாக பணம் சம்பாதிக்கலாம். இந்த கட்டுரையில் எப்படி இணையதளத்தில் அட்சென்ஸ் மூலம் பணம் சம்பாதிப்பது அதன் சாதக, பாதகங்களை பற்றி விரிவாக விளக்கியுள்ளேன்.

கூகுள் அட்சென்ஸ் என்றால் என்ன?

உங்களின் வலைப்பதிவிற்கு வரும் traffic ஐ பயன்படுத்தி நீங்கள் கூகுள் அட்சென்ஸ் மூலம் இணையத்தில் பணம் சம்பாதிக்கலாம். இதை பெரும்பாலான வலைப்பதிவாளர்கள் தங்களின் வலைப்பதிவின் மூலம் பணம் சம்பாதிக்க பயன்படுத்தப்படும் முதன்மையான முறையாக பயன்படுத்துகின்றனர். Google.Com தங்களின் வருமானத்தின் பெரும்பகுதியை மற்ற இணையதள முகவர்களை, அவர்களின் தலைப்பிற்கு ஒத்த மற்ற இணையதளங்களில் விளம்பரம் செய்ய வைப்பதன் மூலம் சம்பாதிக்கிறது.  இந்த செயலை இவர்கள் Adwords.Com என்ற அவர்களின் இணையதளத்தின் மூலம் செய்கின்றனர்.

நீங்கள் கூகுளில் தேடும்பொழுது சில இணையதளங்கள் முதலில் sponsored என்ற குறியிட்டு தோன்றும் மற்றும் சில விளம்பரங்கள் உங்கள் தேடல் பக்கத்தில் வலது பக்கம் தோன்றும். இந்த விளம்பரங்கள் Sponsored விளம்பரங்கள் என்று அழைக்கப்படும். இந்த விளம்பரங்கள் ஒவ்வொன்றும் க்ளிக் செய்யபட்டவுடன் அந்த விளம்பரத்தை வெளியிட்டவர் கூகுள் நிறுவனத்தை அதற்கான தொகையை செலுத்தவேண்டும். இவ்வாறு கூகுள் தங்களின் வருமானத்தில் பெரும்பகுதியை சம்பாதிக்கின்றன.

இதுபோன்ற விளம்பரங்களை நீங்கள் உங்களின் வலைப்பதிவின் பக்கங்களில் காட்சிபடுத்த அனுமதிப்பாதல் நீங்கள் கூகுள் நிறுவனத்திடம் இருந்து  உங்களின் வருமானத்தை பெறலாம். உங்களின் வலைப்பதிவிற்கு வரும் Traffic மற்றும் CTR(Click Through Rate) ஐ பொருத்து நீங்கள் இணையத்தில் பணம் சம்பாதிக்கலாம். இதை செய்யும் கூகுள் நிறுவனத்தின் ஒரு பகுதி அட்சென்ஸ் எனப்படும்.

Note:

Traffic - உங்களின் வலைத்தளத்திற்கு வரும் வாடிக்கையளர்களின் எண்ணிக்கை.

Page Views -  உங்களின் வலைத்தளத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் ஒரு மாதத்திற்கு மொத்தம் எத்தனை பக்கங்களை பார்வையிடுகின்றனர்.

CTR(Click Through Rate): உங்களின் வலைத்தளத்திற்கு வரும் வாடிக்கையாளர்களில் எத்தனை சதவீதம் நபர்கள் உங்களின் வலைப்பதிவில் காட்சிப்படுத்த பட்டுள்ள விளம்பரங்களை க்ளிக் செய்கின்றனர் என்பதாகும்.


இந்த கட்டுரையை முழுவதுமாக படிக்கவும். ஏனெனில் அட்சென்ஸ் ல் சேர்வது மட்டும் உங்களுக்கு நிலையான வருமானத்தை தராது. நீங்கள் அட்சென்ஸ் மூலம் அதிக பணம் ஈட்டுவதற்கு இந்த கட்டுரையை தொடர்ந்து படிக்கவும்.

அட்சென்ஸ் எப்படி வேலை செய்கிறது?

இதை புரிந்துகொள்வது மிகவும் எளிமையானது. உங்களின் வலைப்பதிவில் காட்சிபடுத்தப்பட்டிருக்கும் விளம்பரம் க்ளிக் செய்யப்படும்போது உங்களுக்கு அதற்கான பணம் அளிக்கப்படும்.

அட்சென்ஸ் மூலம் எவ்வளவு பணம் சம்பாதிக்கலாம்?

ஒவ்வொரு விளம்பரமும் க்ளிக் செய்யப்படும் போது நீங்கள் பெரும் கமிசன் தொகையானது, அந்த விளம்பரத்தை காட்சிப்படுத்த கூகுள் நிறுவனத்திற்கு அளிக்கப்படும் தொகையை பொருத்து மாறுபடும். வலைப்பதிவு நண்பர்களிடம் கேட்டறிந்த தகவலின்படின் ஒரு விளம்பரத்திற்கு 2  அமெரிக்க செண்ட் முதல் 12 அமெரிக்க டாலர் வரை இருக்கும். பொதுவாக ஒரு விளம்பரத்திற்கு 1 அமெரிக்க டாலருக்கு மேல் கிடைப்பது அரிதான ஒன்றாகும். எனவே நீங்கள் உங்களின் அட்சென்ஸ் வருமானத்தை கணிப்பது கடினமான ஒன்றாக இருக்கிறது.
நீங்கள் வலைப்பதிவு செய்ய எடுத்திருக்கும் தலைப்பு மற்றும் அதற்கு இருக்கும் போட்டியை பொருத்து உங்களின் கமிசன் தொகை மாறுபடும். நீங்கள் ஒரு விளம்பரத்திற்கு எவ்வளவு பெறுகிறீர்கள் என்பதை காண முடியாது. ஆனால் ஒரு நாளைக்கு , ஒரு மாதத்திற்கு மற்றும் ஒரு வருடத்திற்கு எவ்வளவு சம்பாதித்து இருக்கிறீர்கள் என்பதை கானலாம்.

கூகுள் அட்சென்ஸ்ல் சேருவது எப்படி?

நீங்கள் உங்கள் வலைப்பதிவில் 30+ கட்டுரைகளை கொண்டவுடன்,  http://adsense.google.com சென்று விண்ணப்பிக்கலாம். உங்களின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளபட்டவுடன் நீங்க்ள் கொடுக்கப்பட்டுள்ள HTML code களை Copy செய்து உங்களின் வலைப்பதிவில் நீங்கள் விருப்பப்படும் பக்கத்தில் Paste செய்யுங்கள். நீங்கள் விளம்பரங்களை படம் அல்லது வார்த்தை விளம்பரங்களாக காட்சிப்படுத்தலாம். 

அட்சென்ஸ் மூலம் இணையத்தில் அதிக பணம் சம்பாதிக்கும் வழிகள்


Traffic அதிகப்படுத்துங்கள்

நீங்கள் உங்களின் இணையதளத்திற்கு Traffic ஐ அதிகப்படுத்தவில்லை எனில், நீங்கள் அட்சென்ஸ் மூலம் பணம் சம்பாதிப்பது கடினமே. இது எளிமையாக பணம் சம்பாதிக்க பயன்படும் முறை என்று எண்ணவேண்டாம். இதில் பணத்தை சம்பாதிக்க அதிக உழைப்பையும் மற்றும் நேரத்தையும் பெரும்.

பரிசோதியுங்கள்

உங்களின் வலைப்பதிவில் எந்த விளம்பரம் அதிக க்ளிக் பெறுகிறது படத்துடன் கூடிய விளம்பரமா? அல்லது எழுத்தை மட்டும் கொண்ட விளம்பரமா? என் பரிசோதியுங்கள். மேலும் அவற்றை செங்குத்தாக காட்சிபடுத்துவதா அல்லது கிடைமட்டமாக காட்சிப்படுத்துவதா? என பரிசோதிங்கள். அவற்றின் அளவு மற்றும் நிறம் ஆகியவற்றை மாற்றுங்கள்.

அட்சென்ஸில் உங்களால் ஏன் அதிக பணம் ஈட்ட முடியவில்லை.


 குறைந்த Traffic அளவு


உங்களின் வலைப்பதிவில் 500க்கும் குறைந்த Traffic இருந்தால், நீங்கள் இணையத்தில் பணம் சம்பாதிப்பது கடினமே. ஏனெனில் பொதுவாக CTR(Click Through Rate)  அளவு 1 அல்லது 2 சதவீதமே இருக்கும். அப்ப்டியெனில் உங்களின் வலைப்பதிவிற்கு கிடைக்கும் க்ளிக் எண்ணிக்கை 5 மட்டுமே. 5 க்ளிக் என்பது ஒருபோதும் உங்களுக்கு அதிக வருமானத்தை கொடுக்காது. 

தொடர்பற்ற விளம்பரங்களை காட்சிபடுத்துதல்

உங்களின் வலைப்பதிவிற்கு தொடர்பில்லாத விளம்பரங்களை காட்சிப்படுத்துதல் மூலம் நீங்கள் அட்சென்ஸ் மூலம் இணையத்தில் அதிக பணத்தை சம்பாதிக்க முடியாது. எனவே நீங்கள் வலைப்பதிவு செய்ய தேர்ந்தெடுத்த தலைப்பிற்கு தொடர்புடைய விளம்பரங்களை காட்சிபடுத்துங்கள்.

குறைந்தபட்ச அளவு பணம் தரும் தலைப்புகள்

நீங்கள் வலைப்பதிவு செய்ய தேர்ந்ததெடுக்கும் தலைப்பு அதிக போட்டி உள்ளதாகவும், அதே நேரம் அதிக அளவு கமிசன் தரக்கூடியதாகவும் இருக்க வேண்டும். Insurance, Make Money Online போன்ற தலைப்புகள் அதிக அளவு கமிசன் தரக்கூடிய கடவுச் சொற்கள் (தலைப்பு) ஆகும்.