Pages

eBay மூலம் இணையத்தில் பணம் சம்பாதிக்கும் வழிமுறைகள்

இணையத்தில் பணம் சம்பாதிக்கும் வழிமுறைகள்
இதற்கு முந்தைய கட்டுரைகளில் நீங்கள் எவ்வாறு இணையத்தில் பணம் சம்பாதிக்க முடியும் மற்றும் எந்தெந்த வழிகளில் பணம் சம்பாதிக்க முடியும் என பார்த்தோம். அவற்றில் குறிப்பிட தக்க சில கட்டுரைகள் அட்சென்ஸ் மூலம் இணையத்தில் பணம் சம்பாதிப்பதுஎப்படிவலைப்பதிவின் மூலம்இணையத்தில் பணம் சம்பாதிக்கும் வழிகள்இலவசமாக வலைப்பதிவைஉருவாக்குவது எப்படி என்ற சில கட்டுரைகளை எழுதியிருந்தேன். இந்த கட்டுரையின் மூலம் eBay மூலம் இணையத்தில் பணம் சம்பாதிக்கும் வழிமுறைகள் பற்றி பார்ப்போம்.

கடந்த சில ஆண்டுகளாக எண்ணற்ற தொழில்முனைவோர்கள், eBay மூலம் பல கோடிகளுக்கு அதிபர்களாக மாறி உள்ளனர். இவர்கள் இந்த நிலையை அடைய பல இன்னல்களை கடந்து வந்துள்ளனர்பல ஆயிரக்கணக்கான ரூபாய்களை தங்களின் முதலீடாக முதலிட்டு உள்ளனர்தங்களால் முடிந்த அளவுக்கு அவர்களின் உழைப்பை செலவழித்துள்ளனர். எனவே அனைவரும் பல கோடிகளை இணையத்தில் எளிமையாக சம்பாதித்து விடலாம் என எண்ணவேண்டாம். இது அத்துணை எளியானதும் இல்லைகடினமானதும் இல்லை. என்வே நீங்கள் உங்களின் உழைப்பை முதலீடாக மாற்றுங்கள் அது அதற்கான வெகுமானத்தை உங்களுக்கு திருப்பி செலுத்தும். திரும்பவும் நினைவுப்படுத்த விரும்புகிறேன் இணையத்தில் பணம் சம்பாதிப்பது என்பது சில காலம் எடுக்கும் மற்றும் இதற்கு கடின உழைப்பு அவசியமாகும்.

எவ்வாறு eBay பணம் சம்பாதிக்கும் முடியும்?


eBay ல் நீங்கள் உங்களின் பொருளை விற்பதன் மூலம் நீங்கள் இணையத்தில் பணம் சம்பாதிக்கலாம். இதில் நீங்கள் உங்கள் பொருள்களை விற்பது என்பது நீங்கள் சொந்தமாக தொழில் தொடங்குவதற்கு சமமாகும். eBay ல் நீங்கள் வெற்றியடைய தேவையானவை அற்பணிப்புதன்னம்பிக்கை மற்றும் இடைவிடா உழைப்பு.

அனைவரும் eBay ல் பணம் சம்பாதிக்க முடியுமா?


ஆம். அனைவரும் eBayல் பணம் சம்பாதிக்கலாம் அதற்கு நீங்கள் நன்கு திட்டமிட வேண்டும். அதிக முதலீடு செய்து உங்கள் பொருள்களை விற்பதால் மட்டும் நீங்கள் இணையத்தில் பணம் சம்பாதிக்க முடியாது. எந்த பொருளை விற்றால் அதிக வருமானம் கிடைக்கும்,  எந்த பொருளை மக்கள் அதிகமாக விரும்புகின்றனர் என திட்டமிட  வேண்டும்.

எதை வேண்டுமானாலும் eBay ல் விற்கலாமா?


எல்லா பொருள்களும் eBay ல் நன்றாக விற்பதில்லை. நீங்கள் விற்பனை செய்ய விரும்பும் பொருள் எளிதாக வாங்குபவர்களுக்கு பட்டுவாடா செய்யகூடியதாக இருக்க வேண்டும். மேலும் நீங்கள் பட்டுவாடா செய்ய செலுத்தும் தொகை குறைதபட்ச தொகையாக இருக்கவேண்டும். நீங்கள் தொலைக்காட்சி விற்பனை செய்வதாக கொள்வோம். இதை நீங்கள் பட்டுவாடா செய்ய ஆகும் தொகை ஏறக்குறைய தொலைக்காட்சி பெட்டியின் மதிப்பில் பாதி இருக்கும். ஒருவேளை நீங்கள் விற்பது டி சர்ட் ஆக இருந்தால் அதை நீங்கள் எளிதாக பட்டுவாடா செய்யலாம் மேலும் பட்டுவாடா செய்ய குறைந்தபட்ச தொகை மட்டுமே ஆகும். எனவே நீங்கள் விற்பனை செய்யும் பொருளை கவனமுடன் தேர்ந்தெடுக்க வேண்டும்.

உங்கள் பொருளை eBay ல் எப்படி முதலில் வரிசைபடுத்துவது?


புகைப்படம்


நீங்கள் விற்கும் பொருளின் புகைப்படம் தரமானதாக இருக்கவேண்டும். மழுத்த புகைப்படங்கள் அல்லது பழைய புகைப்படங்கள் போன்றவைகளை பயன்படுத்துவதை தவிருங்கள். மேலும் உங்களின் புகைப்படத்தின் பின்புறம் நன்றாக இருக்கும்படி பார்த்து கொள்ளுங்கள். பொருளின் பல்வேறு கோணங்களில் படம் எடுத்துஅதிக படங்களை வெளியிடுங்கள். இது வாடிக்கையாளர்களை கவர உதவும்.

விளக்கம்


உங்களின் பொருளைப்பற்றிய முழு விவரத்தையும் தெளிவாக விளக்குங்கள்அதில் குறிப்பிட பட்டுள்ள அனைத்து தகவல்களுக்கும் பதில் அளியுங்கள். ஏனெனில் 10000 கொடுத்து வாங்கப்போகும் ஒரு பொருளின் முழு விவரத்தையும் வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்ள விரும்புவார்கள். பெரும்பாலானவர்கள் அனைத்து தகவல்களையும் நிரப்புவதில்லைஆனால் நீங்கள் நிரப்புங்கள். உங்கள் பொருளின் முழு விவரத்தையும் அறிந்துகொள்ள உதவுங்கள். இது மற்ற பொருள்களை காட்டிலும் உங்கள் பொருள்களை வாங்க உதவும். உங்களின் பொருள்கள் கூகுள் தேடுபொறியில் இடம்பெற அது சார்ந்த குறியீட்டு சொற்களை சேருங்கள். இது உங்கள் பொருளை வாடிக்கையாளர்கள் வாங்குவதற்கு அதிகம் உதவும்.

பொருளின் பிராண்ட் பெயரை தவறாக அல்லது வார்த்தை பிழைகளை செய்யாதிர்கள். பொருளுக்கு ஏற்ற தலைப்பை தேர்ந்தெடுங்கள் , மேலும் அதை தெளிவாக குறிப்பிடுங்கள்.

ஆய்வு செய்தல்


உங்களின் பொருளுக்கு சரியான சந்தை விலையை ஆய்வு செய்யுங்கள். கூகுள் தேடுபொறியில் உங்கள் பொருளின் சந்தை விலையை மற்ற இணையதளங்களில் தேடுங்கள். ஏனெனில் உங்கள் பொருளுக்கு சரியான விலையை இது தேர்ந்தெடுக்க உதவும்.

பொதுவாக செய்யும் சில தவறுகள்


நேரத்திற்கு பட்டுவாடா செய்யாமல் இருத்தல்.


ஒருவேலை நீங்கள் பொருளை குறிப்பிட்ட தேதியில் பட்டுவாடா செய்யவில்லை எனில் முகவர்கள் எரிச்சல் அடைவது உறுதி. ஒருவேளை குறிப்பிட்ட நேரத்திற்கு பட்டுவாடா செய்யப்படவில்லை எனில் முகவருக்கு தாமதமானதை தெரிவித்தி மின்னஞ்சல் அனுப்புங்கள். உங்களின் தவருக்கு வருத்தம் தெரிவியுங்கள். இது உங்களின் மீது ஒரு நம்பகத்தன்மையை உண்டாக்கும். மேலும் உங்கள் மீதான நெகடிவ் FeedBack  உங்களின் விற்பனையை பாதிக்கும்.

சரியாக சந்தைபடுத்தாமை 


உங்களின் பொருட்களை சரியாக சந்தைபடுத்தாமல் இருத்தல். உங்களின் பொருட்களை சரியாக சந்தை படுத்துங்கள் இது உங்களின் விற்பனை அதிகரிக்கும். மேலும் பொருட்களை ஒரு தொகுப்பாக சந்தை படுத்துங்கள். உதாரணமாக எலக்ட்ரானிக் பொருட்களுடன் Stabilizer போனறவற்றை தொகுப்பாக விற்க கற்றுக்கொள்ளுங்கள்.

பொருட்களை நிலுவையில் வைத்தல்


பொருட்களின் எண்ணிக்கையை கணக்கில் வையுங்கள். எப்போதும் உங்கள் பொருட்கள் குறைய குறைய வாங்கி நிலுவையில் வையுங்கள். மொத்த பொருட்கள் விற்று தீரும் வரை காத்திருக்காதீர்கள்.

ஆய்வு செய்தல்


விற்க கூடிய பொருட்களை வாங்குங்கள். அதிக விலை பொருட்களை தேர்ந்தெடுப்பதை தவிருங்கள். எளிதில் கையாள கூடிய பொருட்களை தேர்ந்தெடுங்கள். பொருட்களை பட்டுவாடா செய்ய குறைந்த பட்ச செலவு ஆகும் பொருட்களை தேர்ந்தெடுங்கள்.


eBayல் இன்றே உங்கள்  கணக்கை தொடங்குங்கள். இது மின்னஞ்சல் முகவரி பெறுவது போல எளிமையான ஒன்று தான்.இதை பூர்த்தி செய்ய 2 முதல் 3 நிமிடங்கள் ஆகும். விற்கவேண்டிய பொருளை தேர்வு செய்யுங்கள்.அதை குறித்த முழுவிவரத்தையும் நிரப்புங்கள். சரியான விலை கூகுள் உதவியுடன் தேர்ந்தெடுங்கள். உங்களின் பொருளை சரியாக சந்தைப்படுத்துங்கள் மற்றும் eBay ல் வரிசைப்படுத்துங்கள். இன்றே இணையத்தில் பணம் சம்பாதிக்க தொடங்குங்கள்.

உங்களின் கணக்கை தொடங்க க்ளிக் செய்யுங்கள்..eBay.Com