ஆன்லைன் சர்வே வேலைகள் மூலம் இணையதளத்தில் பணம் ஈட்டுவது பற்றிய எனது முன் அனுபவங்களை இந்த கட்டுரையில் தொகுத்து இருக்கிறேன். இதற்கு முந்தைய கட்டுரைகளில் பகுதி நேர பணியாளர் ஆன்லைன் வேலைகளின் மூலம் பணம் சம்பாதிப்பது, சிறு, குறு ஆன்லைன் வேலைகளின் மூலம் ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது எப்படி? ஆகியவற்றை பற்றி விரிவாக பார்த்தோம். இன்று நான் எனது ஆன்லைன் சர்வே மூலம் பணம் சம்பாதிக்கும் நுணுக்கங்களை உங்களுக்கு இந்த கட்டுரையில் விளக்க இருக்கிறேன்.
உங்களிடம் கணினி இருக்கிறதா?, ஆன்லைன் சர்வே மூலம் ஆன்லைனில் பணம் சம்பாதிக்க நினைக்கிறீர்களா? நீங்கள் சரியான இணையதளத்திற்கு தான் வந்துள்ளீர்கள். நூற்றுக்கணக்கான கம்பெனிகள் தங்களின் புதிய தயாரிப்புகளை நாள்தோறும் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. இவ்வகை கம்பெனிகள் தங்களின் தயாரிப்பு குறித்து விரிவான ஆய்வுகளை தயாரிப்புகளை வெளியிடுவதற்கு முன்னும், வெளியிட்ட பின்னரும் மேற்கொள்கின்றன.அந்த தயாரிப்பு குறித்த உங்கள் கருத்துகளை தெரிவிப்பதன் மூலம் நீங்கள் ஊதியத்தை ஈட்டலாம்.
இந்த சர்வே வேலைகளை செய்வதன் மூலம் நீங்கள் ஒரே நாளில் செல்வந்தராக முடியாது. இந்த ஆன்லைன் சர்வேக்களை செய்வதன் மூலம் மாதம் $100 இருந்து $150 வரை சம்பாதிக்கலாம். நீங்கள் உங்களின் உழைப்பை பொருத்து நான் குறிப்பிட்டதை விட குறைவாகவோ அல்லது அதிகமாகவோ சம்பாதிக்கலாம். சர்வே வேலைகளின் மூலம் பணம் மட்டுமல்லாமல், அந்த கம்பெனியின் தயாரிப்புகளையே பரிசாக பெறலாம்.
Recommended: eBay மூலம் இணையத்தில் பணம் சம்பாதிக்கும் வழிமுறைகள்
அடிப்படை தேவைகள்:
ஒரு கணினி மற்றும் இணைய தொடர்பு ஆகிய இரண்டு மட்டுமே இந்த வேலைகளுக்கு அடிப்படை தேவையாகும். மேலும் தொடர்ந்து உங்களின் மின்னஞ்சல் இன்பாக்ஸ் கவனிக்க வேண்டும். சர்வே அழைப்புகள் உங்களுக்கு எப்போது வேண்டுமானலும் வரலாம் நாள்தோறும் உங்களின் இன்பாக்ஸ் ஐ கவனிப்பது அவசியமாகும்.
சர்வே இணையதள தேர்வு:
நீங்கள் சர்வே செய்து உங்களின் ஆன்லைன் வேலையை துவங்குவதற்கு முன் நீங்கள் கவனிக்க வேண்டியது சரியான இணையதளத்தை தேர்வு செய்தல். இணையங்களில் பல நூற்றுக்கணக்கான ஆன்லைன் சர்வே இணையதளங்கள் இருக்கின்றன. இவற்றில் வெகு சில மட்டுமே உண்மையான ஆன்லைன் சர்வே வேலைகளை வழங்குகின்றன. பல இணையதளங்கள் வேலை வழங்குவதற்கு கட்டணம் வசூலிக்கின்றன. எந்த ஒரு உண்மையான சர்வே இணையதளங்களும் கட்டணம் வசூலிப்பது இல்லை. எனவே எந்த இணையதளத்திலும் கட்டணம் செலுத்த வேண்டாம். பல நூற்றுக்கணக்கான இலவசமாக வேலை வழங்கும் இணையதளங்கள் இணையத்தில் உள்ளன. அவற்றுள் நான் பயன்படுத்திய சிறந்த 5 சர்வே இணையதளங்களை இந்த கட்டுரையில் வரிசைப்படுத்தியுள்ளேன்.
ஊதியம் மற்றும் பரிசு பொருட்கள்
ஒவ்வொரு சர்வேயும் அதன் அளவை பொருத்து சராசரியாக $5 இருந்து $15 வரை மதிப்புடையதாக இருக்கும். இது மட்டுமில்லாமல் பல இணையதளங்கள் சர்வேகளுக்கு பரிசு பொருட்களை வழங்குகின்றன. நீங்கள் ஒரு கம்பெனியின் தயாரிப்புகளை பயன்படுத்தி அதைப்பற்றிய கருத்துகளை தெரிவித்து அதை நீங்கள் பரிசாக பெறலாம்.ஒவ்வொரு இணையதளமும் அதற்கேற்றார் போல் குறைந்தபட்ச பண அளவை பெற்றுள்ளன. நீங்கள் குறைந்தபட்ச அளவை அடைந்தவுடன், நீங்கள் உங்களின் பணத்தை உங்களின் வங்கி கணக்கிற்கு மாற்றிக் கொள்ளலாம்.
நான் இதுவரை செய்த சர்வேக்களில் மிக அதிக மதிப்புடையது $50, இந்த சர்வேக்கள் 30 நிமிடம் முதல் 60 நிமிடம் வரை நேரம் எடுக்கும்.நான் இதுவரை எடுத்த சர்வேக்களில் பணம் மட்டுமில்லாமல் பரிசு பொருட்கள், பரிசு கூப்பன்களை முதலியவற்றை பெற்று இருக்கிறேன்.
சில அடிப்படை நுணுக்கங்கள்:
நான் ஆன்லைன் சர்வே இணையதளங்களில் இணைந்து வேலை செய்த ஆரம்ப காலங்களில் இரண்டு இணையதளங்களில் மட்டுமே சேர்ந்து, சர்வே அழைப்புகளுக்காக ஒவ்வொரு நாளும் மின்னஞ்சல் இன்பாக்ஸ் கவனித்து கொண்டு இருந்தேன். வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று அழைப்புகளே வந்தன. பிறகு நான் 5 இணையதளங்களில் சேர்ந்து வேலை செய்யும் போது வாரத்திற்கு 5 முதல் 8 அழைப்புகள் வந்தன. ஒவ்வொரு சர்வேயும் அதிகபட்சமாக 30 நிமிடங்கள் வரை எடுக்கும். தினமும் 30 நிமிடம் எனக்கு குறைவான நேரம், பின் நான் 10 சர்வே இணையதளங்களில் இனைந்து தினமும் இரண்டு முதல் நான்கு சர்வே அழைப்புகள் வருகின்றன. எனவே நீங்கள் தினமும் 2 மணி நேரம் உழைக்க விரும்புபவரானால், நீங்கள் குறைந்தபட்சம் 5 முதல் 10 இணையதளங்களில் சேருதல் மிகவும் அவசியமானது. நீங்கள் ஆன்லைன் சர்வே வேலை இணையதளங்களில் உங்களின் உண்மையான தகவல்களை பதிவு செய்தல் அவசியம், நீங்கள் கொடுக்கும் உங்களின் தகவல்களே உங்களுக்கு சர்வே அழைப்புகள் அனுப்புவதற்கான அடிப்படை தகவல் ஆகும்.
Recommended: ஆன்லைன் வேலைகள்:சிறந்த 5 சர்வே வேலை இணையதளங்கள்
மேலும் எனது ஆன்லைனில் வேலை செய்து பணம் சம்பாதிக்கும்
கட்டுரைகளுக்கு, உங்களின் மின்னஞ்சல்முகவரியை பதிவு செய்யவும்.
கட்டுரைகளுக்கு, உங்களின் மின்னஞ்சல்முகவரியை பதிவு செய்யவும்.
Sign up for my newsletter and get my latest money making tutorials delivered straight to your inbox
