Updated On 20 Dec 2014
வீட்டில் கிடைக்கும் ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக கழிக்க விரும்புவரா நீங்கள்?, பகுதி நேர வேலைகளின் மூலம் உங்கள் தேவையை நீங்களாகவே பூர்த்தி செய்ய விரும்பும் மாணவர்களா? அல்லது ஆன்லைன் வேலைகள் மூலம் உங்கள் மாத வருமானத்தை உயர்த்த விரும்புபவரா?. இதோ உங்களுக்கு வழிகாட்ட இந்த கட்டுரையை தொடர்ந்து படிக்கவும். முன் எழுதிய பயிற்சி கட்டுரையில் பகுதி நேர பணியாளர் இணையதளங்கள் மூலம் எப்படி பணம் சம்பாதிப்பது என்பதை பற்றி பார்த்தோம். இந்த பயிற்சி கட்டுரை மூலம் ஆன்லைனில் சிறு, குறு வேலைகளை தரும் இணையதளங்களை அனுகுவது எப்படி?, இவ்வகை இணையதளங்களில் அளிக்கப்படும் வேலைகள் எவை?, இந்த இணையதளங்களின் மூலம் பணம் ஈட்டுவது எப்படி? என்று பார்ப்போம். ஆன்லைனில் பணம் சம்பாதிக்கும் வழிகளை விரிவாக பார்ப்பதிற்கு முன், சில அடிப்படை தகவல்களை தெரிந்துகொள்வோம்.
இணையத்தில் சிறு, குறு வேலைகளின் மூலம் பணம் சம்பாதிக்க அடிப்படை தேவைகள்?
இணையத்தில் பணம் சம்பாதிக்க அடிப்படை தேவைகளாக கருதப்படுவது கணினி மற்றும் மிதவேக இணைய தொடர்பு, கணியை பயன்படுத்த தேவையான குறைந்தபட்ச திறன். சிறு, குறு வேலைகளுக்கு பயன்படும் மேலும் சில தேவைகளாவன மின்னஞ்சல் முகவரி, கருத்துகளை பதிவு செய்ய கருத்து மன்றங்களில் கணக்கு வைத்திருக்க வேண்டும். பதிவிறக்கம் மற்றும் நிறுவுதல் பற்றிய குறைந்தபட்ச திறன் பெற்றிருக்க வேண்டும்.
Recommended: ஆன்லைன் வேலைகள்:எலக்ட்ரானிக் பொருள்களை ஆன்லைனில் இலவசமாக பெறுவது எப்படி?
சிறு, குறு ஆன்லைன் வேலைகள் என்றால் என்ன?
இணையத்தில் எண்ணற்ற இணைய தளங்களில் சிறு(Small), குறு(Micro) ஆன்லைன் வேலைகள் வழ்ங்கபடுகின்றன. இவற்றில் பெரும்பாலும் அளிக்கபடும் வேலைகளை செய்து முடிக்க 2 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை ஆகும். அளிக்கபடும் வேலையின் அளவு மற்றும் அதை செய்து முடிக்க எடுத்து கொள்ளும் நேரத்தை பொருத்து, ஒவ்வொரு வேலைக்கேற்றார் போல ஊதியம் வழங்கபடும். ஒவ்வொரு வேலைக்கும் சுமார் $.10 இருந்து $2 அமெரிக்க டாலர் வரை ஊதியம் வழங்கபடுகிறது. நீங்கள் செலவிடும் நேரத்தை பொருத்து உங்களின் ஊதியம் அதிகரிக்கும்.
இணையதளங்களில் வழங்கபடும் சிறு குறு வேலைகள் எவை?
இணையங்களில் நூற்றுக்கணக்கான சிறு, குறு ஆன்லைன் வேலைகளை வழங்கும் எண்ணற்ற இணயதளங்கள் காணப்படுகின்றன. அவற்றுள் சில இணையதளங்கள் வழங்கும் சில சிறு, குறு வேலைகளை சான்றாக பார்ப்போம்.
Sign Up(பதிவு): Sign Up எனப்படும் இணையதள பதிவு வேலையில் நீங்கள் கொடுக்கபட்டுள்ள இணையதளத்தில் உங்களின் பெயர், மின்னஞ்சல் முகவரி போன்ற சில தகவல்களை பதிவு செய்ய வேண்டியிக்கும். இந்த பதிவு வேலையை செய்ய 2 அல்லது 3 நிமிடங்களே ஆகும். ஒவ்வொரு பதிவு வேலையும் ஏறக்குறைய சுமார் $ .10 மதிப்புடையது.
கருத்து பதிவு(Forum Posting): Forum Posting எனப்படும் கருத்து பதிவில் நீங்கள் உங்கள் கருத்துகளை சில குறிப்பிட்ட கருத்து பதிவு இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். உங்களின் கருத்துகள் திருப்திகரமாக இருக்கும்பட்சத்தில் உங்களின் ஊதியம் உங்களுக்கு வழங்கப்படும். இதை செய்து முடிக்க சுமார் 5 முதல் 10 நிமிடம் வரை ஆகும். வேலையின் அளவை பொருத்து ஊதியம் சுமார் $.10 இருந்து $.50 அமெரிக்க டாலர் வரை மாறுபடும்.
பதிவிறக்கம் மற்றும் நிறுவுதல்(Download and Install): இந்த வேலைக்காக நீங்கள் கொடுக்கபட்டுள்ள இணையதளத்திலிருந்து கணினி மென்பொருள் அல்லது சில கோப்புகளை பதிவிறக்கம் செய்து அதை உங்கள் கணினியில் நிறுவ வேண்டும். இந்த வேலையை செய்ய சுமார் 10 முதல் 20 நிமிடம் ஆகும். சுமார் $.50 முதல் $1 வரை மதிப்புடையது.
இணையதள கட்டுரை எழுதுதல்: Article Writing எனப்படும் இந்த ஆன்லைன் வேலைக்கு குறிப்பிட்ட சில தலைப்புகளில் இணையதளத்திற்கு கட்டுரை எழுத வேண்டியிருக்கும். ஆங்கில புலமை படைத்தவர்களுக்கு மிகவும் பொருத்தமான ஆன்லைன் வேலையாகும். இது சுமார் $.50 முதல் $1 அமெரிக்க டாலர் மதிப்புடையது.
Read: இலவச வலைப்பதிவை( Blog) BlogSpot.com மூலம் உருவாக்குவது எப்படி
Read: இலவச வலைப்பதிவை( Blog) BlogSpot.com மூலம் உருவாக்குவது எப்படி
கருத்து தெரிவித்தல்(Comments on Blog): இந்த வேலையானது கொடுக்கபட்ட இணையதளத்தை ஆராய்ந்து, அந்த இணைய தளத்தை பற்றிய கருத்துகளை தெரிவிக்க வேண்டும். இணையதளத்தை பற்றிய தகுந்த கருத்துகளை கூற வேண்டும். உங்களின் கருத்து திருப்தியளிக்கும் பட்சத்தில் உங்களுக்கு ஊதியம் வழங்கப்படும்.
பணத்தை உங்களுக்கு அளிக்கும் முறைகள்?
சிறு மற்றும் குறு ஆன்லைன் வேலை இணையதளம் தங்களின் பணியாளர்களுக்கு பேபால்(paypal), பேயாசா(payaza) , வங்கி காசோலை(check) மற்றும் வங்கியில் நேரடியாக பணம் செலுத்துதல்(direct deposit) போன்ற முறைகளில் ஊதியத்தை வழங்குகிறது. ஊதியத்தை உங்கள் கணக்கில் மாற்ற உங்களின் இணையதள கணக்கில் குறைந்தபட்சம் $1 இருக்க வேண்டும். ஊதியம் உங்களின் கணக்கில் 2 அல்லது 3 வேலை நாட்களில் வந்து சேரும்.
மேலும் எனது ஆன்லைனில் வேலை செய்து பணம் சம்பாதிக்கும் கட்டுரைகளுக்கு, உங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்.
Sign up for my newsletter and get my latest money making tutorials delivered straight to your inbox
