Updated On 5 Dec 2014
ஆன்லைன் வேலைகள் மூலம் தங்கள் பொருளாதார நிலையை மாற்ற நினைப்பவர்கள் முதலில் தேர்ந்தெடுப்பது பகுதி நேர பணியாளர் ஆன்லைன் வேலையாகத்தான் இருக்கும். ஏனெனில் இதில் இருக்கும் வேலைகள் அனைத்து தரப்பு பனியாளர்களுக்கும் பொருந்த கூடியது மற்றும் இதில் அளிக்கபடும் பெமெண்ட்(PAYMENT) $20 அமெரிக்க டாலர் லிருந்து $1500 அமெரிக்க டாலர் வரை இருக்கும். இந்த கட்டுரை(TUTORIAL) மூலம் பகுதி நேர பணியாளராக வேண்டியதற்கான அடிப்படை தகவல்களை தெரிந்துகொள்வோம்.
பகுதி நேர பணியாளர் என்றால் என்ன?
இணையத்தில் பல நூற்றுக்கணக்கான பகுதி நேர பணியாளர் இணையதளங்கள் உள்ளன. இவை வெவ்வேறு வகையான பணிகளை கொண்டுள்ளன. இங்கு ஒரு தனி நபராகவோ அல்லது ஒரு குழுவாகவோ பதிவு செய்து, தங்களுக்கேற்ற பணிகளை செய்து முடிக்கலாம். ஒவ்வொரு முறை பணியை முடித்த பின்னர் வேலைக்கான பெமெண்ட்(PAYMENT) பெறலாம்.
பகுதி நேர பணியாளர் இணையதளங்களில் கிடைக்கும் வேலைகள் எவை?
பகுதி நேர வேலை இணையதளங்கள் $20 இருந்து $1500 வரை தரும் பல நூறு வகையான வேலைகளை வழங்குகின்றன. எனவே அனைத்தையும் விளக்கி கூற முடியததால், அவற்றுள் சில வகையான வேலைகளை மட்டும் இங்கு விளக்கி கூறுகிறேன்.
பகுதி நேர எழுத்தர் வேலைகள்: இந்த வகையான ஆன்லைன் வேலைகள் இ-புத்தகம் எழுதுதல், கதை எழுதுதல், டேட்டா என்ட்ரி, மற்றும் பல எழுது வேலைகள் வழங்குகின்றன. IF YOU'RE A EXPERT OR HAVE DECENT KNOWLEDGE IN ARTICLE WRITING (OR) CONTENT WRITING, THIS IS THE BEST JOB FOR YOU. நீங்கள் இந்த பகுதி நேர பணியாளர் வேலை மூலம் $20 இருந்து $50 வரை சம்பாதிக்கலாம்.
பகுதி நேர தொழில்நுட்ப(IT) பணிகள்: நீங்கள் தொழில் நுட்ப துறையை சார்ந்தவர் அல்லது தொழில் நுட்ப அறிவு இருப்பின் இந்த வேலை உங்களுக்கு பொருத்தமான ஒன்றாக இருக்கும். C, C++, Java, .Net Framework, HTML, Delphi போன்ற கணினி மொழியில்புரொகிராம் எழுத வேண்டியிருக்கும். இதன் மூலம் ஆன்லைன் வேலை ஒன்றிற்கு $20 இருந்து $100 வரை ஊதியம் சம்பாதிக்கலாம்.
இணையதள (WEBSITE) வடிவமைப்பு : நீங்கள் இணையதள வடிவமைப்பில் வல்லவராயின் அல்லது அதைப்பற்றிய அறிவு உள்ளவராயின் இது உங்களுக்கான ஆன்லைன் வேலை ஆகும். இதன் மூலம் கணிசமான தொகையினை பெறலாம்.
லோகோ(LOGO) தயாரித்தல்: நீங்கள் கணினி கிராபிக்ஸ் தெரிந்தவராயின் இது உங்களுக்கு மிகவும் பொருத்தமான ஆன்லைன் வேலையாகும். இதன் மூலம் $20 இருந்து வேலையின் அளவை பொருத்து சம்பாதிக்கலாம்.
பகுதி நேர புகைப்பட பணியாளர்: நீங்கள் தொழில்முறை புகைப்பட கலைஞராயின் இது உங்களுக்கான பணத்தை கொடுக்கும் மிக சிறந்த வேலையாகும். உங்கள் புகைபடங்களை விற்பதன் மூலமாகவோ அல்லது அவர்களுக்கான புகைப்படங்களை எடுத்து கொடுப்பதன் மூலமாகவோ சம்பாதிக்கலாம்.
மெய்நிகர(VIRTUAL) உதவியாளர்: இதன் மூலம் நீங்கள் ஒருவரின் நேர்முக உதவியாளராக வீட்டில் இருந்தபடியே பணியாற்றலாம். அவர்களுக்கான முன்னேற்பாடுகளை சரிசெய்தல், அவர்களின் அன்றாட பணிகளை பட்டியலிடுதல், அவர்களின் மின்னஞ்ல்களை படித்து அதற்கான பதில்களை அனுப்புதல் போன்றவை அடங்கும். இதன் மூலம் ஒர் மணி நேரத்திற்கு $12 வரை சம்பாதிக்கலாம்.
குறிப்பு: இதில் குறிப்பிடபடாத பல நூற்றுக்கணக்கான பகுதி நேர பணியாளர் ஆன்லைன் வேலைகள் இணையதளங்களில் உள்ளன. தங்களுக்கேற்ற ஆன்லைன் வேலைகளை தேர்ந்தெடுக்க பகுதி நேர பணியாளர் இணையதளத்தை பார்வையிடவும்.
இணயதளங்கள் ஆன்லைன் வேலைக்கான பணத்தை (PAYMENT) அளிக்கும் முறைகள்:
பெரும்பாலும் ஆன்லைன் வேலை தரும் இணையதளங்கள் போலவே பகுதி நேர வேலை இணையதளங்களும் பேபால் (PAYPAL), பேயசா(PAYAZA), வங்கி கணக்கில் நேரடி முதலீடு(DIRECT DEPOSIT) மற்றும் காசோலை(CHECK) மூலமாக பணத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன. உங்களது வேலை முடிந்தவுடன் ஊதியம் உங்களுக்கு இரண்டு அல்லது மூன்று வேலை நாட்களில் அளிக்கபடும்.
சிறந்த 5 பகுதி நேர பணியாளர் இணையதளங்கள்
நான் இங்கு பயன்படுத்திய சிறந்த 5 பகுதி நேர பணியாளர் இணையதளங்கள் வரிசைப்படுத்தியுள்ளேன். கீழ்கண்ட அனைத்து இணையதளங்களும் பல வருடங்களாக ஆன்லைன் வேலையை வழங்கிவருகிறது. மேலும் பல பகுதி நேர பணியாளர்களின் விமர்சனங்களின் அடிப்படையில் தொகுத்துள்ளேன்.
Elance பகுதி நேர பணியாளர் இணையதளம் உலக அளவில் அனைவராலும் பயன்படுத்துவது. ஏராளமான ஆன்லைன் வேலைகள் மற்றும் பணியாளர்களை கொண்டது. உங்கள் முன் அனுபவங்களை குறித்து ஒரு profile(சுயவிவரம்) தயாரித்து கொள்ளவும். ஒவ்வொரு பணியை பெறுவதற்கும் நீங்கள் அந்த பணிக்கேற்ற விலையை கேட்க வேண்டும். எனவே நல்ல profile மற்றும் குறைந்த விலை கேட்டல் ( LOW BID ) முதலியவை உங்களின் பணி பெறும் வாய்ப்பை அதிகரிக்கும்.
Elance இணையதளத்திற்கு மாற்றாக ஒன்றை தேர்ந்தெடுக்க விரும்பினால் உங்களுக்கு ஓடெக்ஸ் ஒரு சிறந்த தெரிவாக இருக்கும். இங்கு நீங்கள் Sign Up செய்த முதல் நாளே உங்களுக்கான பணியை பெற முடியும். முதன் முதலில் பணியை தொடங்குபவர் மற்றும் முன் அனுபவமுள்ளவர் என அனைவருக்கும் எண்ணற்ற பணிகளை கொண்டுள்ள ஒடெக்ஸ் இணையதளமானது அதற்கேற்ற பணத்தையும்(PAYMENT) வழங்குகிறது. இன்றே நீங்கள் இந்த இணையதளத்தில் சேர்ந்து உங்களின் வருமானத்தை துவக்கலாம்.
Freelancer இணையதளமானது கடந்த பல வருடங்களாக பகுதி நேர வேலை பணிகளை இணையத்தில் வழங்கிவருகின்றது. மேலும் இதன் எண்ணற்ற வேலைகள் பல பணியாளர்களை கொண்டுள்ளதோடு, பணியாளர்களின் நன் மதிப்பையும் பெற்றுள்ளது.
Fiverr இணையதளத்தில் உங்களின் பணிகளை விற்கலாம். ஒவ்வொரு பணியும் கிக்ஸ்(GIGS) எனப்படும். ஒவ்வொரு கிக்ஸ்ம் $5 மதிப்புடையதாக இருக்க வேண்டும். எந்த வகையான பணிகளையும் நீங்கள் விற்கலாம் சான்றாக homework, படம் வரைதல், graphic design, logo creation, translation(மொழிபெயர்ப்பு), சிறுகதை எழுதுதல். $5 மதிப்புடைய கிக்ஸ் யை தயாரித்து விற்றால் போதுமானது.
Guru பகுதி நேர பணியாளர் இணையதளம் மற்ற இணையதளங்களைப் போல கடந்த சில வருடங்களாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதில் உள்ள ஆன்லைன் வேலைகள் அனைத்து தர பணியாளர்களுக்கும் பொருந்த கூடியதாக உள்ளது. நீங்கள் உங்கள் பணியை தொடர இது உகந்த இணையதளமாக இருக்கும்..
மேலும் எனது ஆன்லைனில் வேலை செய்து பணம் சம்பாதிக்கும் கட்டுரைகளுக்கு, உங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்.
Sign up for my newsletter and get my latest money making tutorials delivered straight to your inbox
